சாதியின் உருவாக்கம்- ஒரு மார்க்சிய புரிதல்

 

 பார்ப்பனர் சாதியக்கட்டமைப்பில் உச்சத்தில் உள்ளனர் என்று சொல்வதால்...
*வருணமுறை
*சாதியம்,தீண்டாமை
ஆகியவற்றை அவர்களே தோற்றுவித்தனர் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
1]தனிச்சொத்துடைமை தான் வருணமுறை தோன்றக்காரணம் என்பதில் மாற்றமில்லை.சத்திரிய அரசர்கள் தன் ஆட்சியை தொடர வருணமுறை பயன்பட்டது.வருணமுறைக்கு தேவையான சட்டத்தை கௌடில்யர் உருவாக்கிய அர்த்தசாஸ்திரம் பயன்பட்டது.அதோடு புராணங்கள்,இதிகாசங்கள் மூலமாக வருணமுறை மக்களின் வாழ்க்கை முறையாக மாறிட சத்திரிய அரசர்களுக்கு பிராமணர்கள் ஆதாரமாக விளங்கினர். ஆக,வருணமுறை தோன்ற பார்ப்பனியம்,இந்துமதம் காரணமல்ல.உற்பத்திமுறையில் ஏற்பட்ட தனிச்சொத்துடைமை காரணமாகும்.
அதேபோல்....
2]சாதியம்,தீண்டாமை தோன்றிட நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை காரணம்.அத்துடன் அகமணமுறை,பிறப்பால் உயர்வு தாழ்வு,படிநிலைவேறுபாடு,சடங்குகள் போன்றவை நிலவிட நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம்.இங்கும்,சாதியம்,தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம்,அல்லது சமூகவேர் அல்லது பொருளாதார அடித்தளம் பார்ப்பனியம்,இந்துமதம் அல்ல.நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே காரணம்.அந்த அடித்தளத்தின் மேலே எழுந்த மேற்கட்டுமானம் தான் மதம் மற்றும் சாதியம்,தீண்டாமை ஆகும்.ஆகவே சாதியம்,தீண்டாமை ஒழிந்திட அதற்கான பொருளாதார அடித்தளத்தை வீழ்த்திவிட்டால்,அதாவது நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை தகர்த்து விட்டால் சாதியம்,தீண்டாமை ஒழியும் என அம்பேத்கர்,பெரியார் கூறியதில்லை.அவர்கள் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஆதரித்தனர்.
3]இலங்கையில் பார்ப்பனிய மதம் இல்லை.ஆனால் சைவ வேளாளர் உண்டு.அவர்களே நிலப்பிரபுத்து  வர்க்கங்கள். இங்கே புத்தமதம் உண்டு. புத்த சிங்களரிடையே சாதியம் உண்டு. தமிழரிடமும் அங்கு சாதி உள்ளது. ஆக சாதியம்,தீண்டாமை நிலவிட பார்ப்பனியம் இந்துமதம் காரணமல்ல. நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை என்பதை மஜஇக-வின் ஆவணங்கள் மட்டுமே கூறுகின்றன.
5]ஆப்பிரிக்காவில்,ஜப்பானில் கூட சாதியம் உள்ளது.ஆனால் அங்கே பார்ப்பனியம்,இந்துமதம் இல்லை.எனவே சாதியம்,தீண்டாமை நிலவிட பார்ப்பனியம்,இந்துமதம் என்றார்களே பெரியாரும் அம்பேத்கரும் அது சரியா என மஜஇக-வினர் கேட்கின்றனர்.
6]வெளிநாடு ஏன்? இந்தியாவின் அஸ்ஸாம்,மிசோரம்,மணிப்பூர் போன்ற பகுதிகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை உருவாகவில்லை.ஆகவே அங்கும் சாதியம்,தீண்டாமை இல்லை.எதற்காக இதைச் சொல்கிறோம்?
சாதியம்,தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே என்பதற்காகத்தான்.கண்ணைமூடிக்கொண்டு தநாமாலெ போன்ற அமைப்புகள் தேசியஇனப்பிரச்சினை தோன்றிட பார்ப்பனியம்,இந்துமதம் காரணம் என்கிறார்கள்.

ஏகாதிபத்திய கள்ள குழந்தையே ட்ராட்ஸ்கியம்-2


 இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளைவிட தொடங்கிய காலம் முதல் டிராட்ஸ்கியவாதம்உடன் பிறந்தே கொல்லும் வியாதிபோல இடதுசாரி இயக்கத்தின் ஏகோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்தி கொண்டேவந்திருக்கிறது.  டிராட்ஸ்கியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின் அது இடதுசாரி இயக்கத்துக்குள் ஊடுறுவியுள்ள முதலாளிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடு என சரியாக குறிப்பிட்டார். புலிப்குணவர்த்தனா முதல் கெல்வின் ஆர்டி செல்வா வரை டிராட்ஸ்கியவாதிகள் இலங்கையில் நமக்கு காட்டி வந்து நிற்கும் சாதனைதான் என்ன?பேச்சில் அதிதீவிரவாதமும் நடைமுறையில் படுமோசமானசரணாகதியும் ஆகும்.பேராசிரியர்.கைலாசபதி.

உண்மையான புரட்சியாளர்கள் மா லெ த்தின் பக்கமே நிற்கமுடியும்பேராசிரியர் கைலாசபதியும் அவ்வாறே நின்றார் என்பதை அவரதுஎழுத்துகள் நமக்கு காட்டுகிறது.

ஆனாலும் தமிழகத்தில் சமிபகாலமாக சில உதிரிகள் ட்ராட்ஸ்கியத்தை தாங்கிபிடித்து வருகின்றனர்.இந்த உதிரிகள்ஓடியாடி வளர்ந்த இடம் மா லெ பாசறையில்தான்.கலைஞர் அவர்கள் நெடுஞ்செழியனைபற்றி குறிப்பிடும் போது அவர்ஒரு கோண தென்னைமரம் என்பார்.ஏனென்றால் அதை வைத்து தண்ணீர்ஊற்றி பராமறித்து வளர்த்துவிட்ட பிறகு அது வளைந்து போய் அடுத்தவர் தோட்டத்தில் தேங்காய் போட்டதுபோல.

ட்ராட்ஸ்கிய உதிரிகளும் அவ்வாறே. நமது ஆசான்களால் முறியடிக்கபட்ட தத்துவபோக்குகள் மீண்டும் மீண்டும் தலைதூக்குவது இயல்புதான். இவற்றை மாலெவாதிகள் ஒன்று பட்டு முறியடிப்பதுதான் தலையாய கடமை.

தொடர்ந்து மார்க்சிய ஆசான்களை குறை கூறுவதும் அது ஏதோ மார்க்சிய விமர்சனம் என்றும் ஏமாற்றும் இவர் யார் எதற்க்காக செய்கிறார் என்பதனை பலமுறை எழுதியாகி விட்டது. மீண்டும் ஒருமுறை அவர்கள் வைத்துள்ள கேள்விகளூக்கு பதிலளிக்க தயாராகிக் கொண்டுள்ளோம். அதற்க்கு முன் அவரிடம் சில கேள்விகள். லெனினின் "என்ன செய்ய வேண்டும்?" நூல் வாசிதுள்ளீரா? மேலும் லெனின் எழுதியுள்ள "ட்ராட்ஸ்கிக்கு எதிராக" நூல் வாசித்து விட்டு வந்தால் சிறப்பாக இருக்கும்.
============
நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் மார்க்சிய முன்னோடிகள் பதில் கொடுத்துள்ளனர் அதனை முழுமையாக யாரும் தொகுக்கவில்லை அவ்வளுவே .... 

நான் எழுதி கொண்டிருக்கும் "ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியா?" என்ற கட்டுரையில் தோழர் பி.சினிவாச ராவ் அவர்கள் எழுதி பகுதி இன்னும் குறைவாக உள்ளதால் எனது எழுத்தை தொடர தேடிய போது எனது எழுத்துக்கு வழு சேர்க்கும் வகையில் கிடைத்த நூல் "AGAINST TROTSKYISM " உண்மையில் நான் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே செய்தி உள்ளது ஆகவே அதனை பற்றிய என் கருத்தை பதிவு செய்கிறேன்.
ட்ரொட்ஸ்கிசம் என்பது ஒரு மார்க்சிய எதிர்ப்பும்,குட்டிமுதலாளித்துவ சந்தர்ப்பவாத போக்குமே என்பதனை ஆரம்ப வரிகளே தெளிவுப் படுத்தி விட்டது. ஆகவே இங்குள்ள சந்தர்பவாத மார்க்சிய விரோத கூட்டம் கூப்பாடு போடுவதில் உண்மையில்லை, இவர்களின் எழுத்தும் பேச்சும் முழுக்க முழுக்க புரட்சிகர சக்திகளை சீர்குலைக்கு வேலையே... ட்ராட்ஸ்கி மார்க்சியத்தையோ லெனின்யத்தையோ தூக்கி பிடிக்கவில்லை மாறாக புரட்சியை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டதை தவிற வேறொன்றும் செய்யவில்லை.

"AGAINST TROTSKYISM " நூலில் லெனின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதை போல் அகிலமும் ட்ராட்ஸ்கியின் கட்சி விரோத போக்கை கண்டித்துள்ளது மேலும் அவ்வப்போது நடந்த வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.
அதன் முன்னுரையில்:-
லெனினின் படைப்புகளில் இருந்து (அவற்றின் முழுமையான அதாவது ட்ராட்ஸ்கியத்தை எதிர்த்த பகுதிகள்) மற்றும் போல்ஷிவிக் கட்சியின் மாநாடுகள் சி.சி.யின் முழுமையான கூட்டங்களிலும் எடுக்கப்பட்ட முடிவுகள், ட்ரொட்ஸ்கிசம் ஒரு மார்க்சிச எதிர்ப்பு, சந்தர்ப்பவாத போக்கு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது, அதன் மோசமான நடவடிக்கைகளைக் காட்டுகிறது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மற்றும் இரண்டாம் சர்வதேச சந்தர்ப்பவாத தலைவர்களுடனும், பல்வேறு நாடுகளின் தொழிலாளர் கட்சிகளில் திருத்தல்வாத, சோவியத் எதிர்ப்பு போக்குகள் மற்றும் குழுக்களுடனும் அதன் உறவுகளை அம்பலப்படுத்துகிறது. உள்ளூர் கட்சி அமைப்புகள் நிறைவேற்றிய தீர்மானங்கள் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான சி.பி.எஸ்.யுவின் ஒற்றுமையை பறை சாற்றுகிறது.
கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் ஏற்றுக்கொண்ட முடிவுகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான சோவியத் தொழிற்சங்கங்களின் தீர்மானங்கள் ஆகியவை இதில் அடங்கும். குறிப்புகள் இந்த புத்தகத்தில் வெளியிடப்பட்ட பொருளைப் பயன்படுத்த உதவுகின்றன.

1943ஆண்டு 21 ஜனவரி 01 ல் வெளியான ஜனசக்தியில் தோழர் பி. சீனிவாசராவ் கட்டுரையின் சுருக்கிய இறுதி பகுதி.(அவரின் பகுதியில் உள்ள தேவையான பகுதிகளை எடுத்தெழுதினேன்).

1. லெனின் சரியான வழிகாட்டினாரென்றும் ட்ராட்ஸ்கி அந்தப் பாதையில் போக வேண்டுமென்று கூறியதற்க்காக ஸ்டாலின் அவரை எதிர்த்து நாடு கடத்திவிட்டதாகவும் ஸ்டாலின் உலக மக்களின் துரோகி என்றும் பிரசாரம் செய்கின்றனர்.

2. 1918 ஜீலை 4 மற்றும் 5 ந் தேதிகளில் சோவியத் காங்கிரஸ் கூடியது. ட்ரொட்ஸ்கியின் அனுமதியின் பெயரில் மாஸ்கோவில் எதிர் புரட்சியினர் கலகத்தை ஆரம்பித்தனர், இதனை சோவியத் படை நசுக்கி விட்டது. ஜெர்மனுக்கும் சோவியத்துக்கும் போர் ஏற்படுத்தி ஆட்சி கவிழ்த்து அதிகாரத்தை கைபற்ற ட்ரொட்ஸ்கி முயற்ச்சி செய்தார்.

3. ட்ராட்ஸ்கி உலக மக்களின் விடுதலைக்கு (புரட்சிக்கு) வேலை செய்தாரா அல்லது ஸ்டாலின் செய்தாரா இதனை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதனை தெரிந்து கொள்ள 1917 ல் நடந்த ரசிய புரட்சி மற்றும் அந்த கால கட்டத்தில் கட்சிக்குள் ட்ராட்ஸ்கியின் பணி போல்ஸ்விக் கட்சியையும் சோவியத் அமைபையும் அழிபதற்க்கு செய்த பல சதிகள் ட்ரொட்ஸ்கியின் உண்மை பக்கத்தை வாசித்திருப்பீர் என்று நம்புகிறேன்.

ஒரு புரட்சிகாரர் எப்படி துரோகியாக முடியும். தொழிலாளி வர்க்க வரலாற்றில் பல புரட்சியாளர்கள் முதாலாளி வர்க்க கோஸ்டியின் குலாம்களாக(அடிமைகளாக) மாறியிருக்கிறார்கள். இத்தாலிய பாசிஸ்ட் முசோலினி ஒரு காலத்தில் இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் இடதுசாரிகளுடைய தலைவனாக் இருந்தான். பின்னர் முதலாளிகளின் கையாளாக மாறி தன்னுடன் பணி புரிந்த பல தோழர்களை சித்தரவதை செய்தான், பிரான்ஸில் டோரியட் என்பவன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பாசிச கூட்டத்தில் போய்ச் சேர்ந்து பின் பிரெஞ்ச் பாஸிஸ்ட் தலைவனாகிறான். 1914 ஆம் ஆண்டு பல சோசலிஸ்ட் தலைவர்கள் ஏகாதிபத்திய கும்பலின் கையாட்களாக மாறித் தன் சக தோழர்காளை கொன்றொழிக்க (கொலை) செய்திருக்கிறார்கள். இவை வரலாற்று புரிதலுக்கு.

சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ட்ராட்ஸ்கி செய்த துரோகங்களை பார்ப்போம்.

அடுத்தடுத்த கட்சி விரோத செயல்களால் ட்ராட்ஸ்கியையும் அவரது ஆதரவாளர்களையும் 1926 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தாவது காங்கிரஸில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டனர். 

1934ம் ஆண்டு கட்சியின் முன்னணித் தலைவர் கிரோவ்வை படுகொலை செய்யப் படுகிறார், இதிலிருந்தே அவர்களின் அரசியல் தேவை தெரிந்தவையே.

1936 டிசம்பர் 22 ந் தேதி சோவியத் சதி வழக்கில் விசாரணையின் போது ராடக் கூறியது, ட்ராட்ஸ்கி தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்டாலின் அரசாங்கத்தை நீக்குவது முடியாத காரியம் ஆகவே ஜெர்மன் மற்றும் ஜப்பான் உதவியுடன் முதலாளித்துவ மனோபாவத்தை பூரணமாக கைவிடாத மக்களையும் கூட்டு பண்ணையில் அதிருப்தி அடைந்துள்ள மக்களையும் மேலும் குலாக்குகளுக்கு கூட்டு பண்ணைகளை விட்டு வெளியேற துடிக்கும் மிராசுதாரர்களையும் பயன்படுத்தி ஜெர்மன் ஜப்பான் உதவியுடன் ஒப்பந்தம் அடிப்படையில் சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் திட்டத்தை வெளிபடுத்தியுள்ளதை வெட்டவெளிச்சமாக்குகிறார்.

அடுத்த சாட்சி பிளாட்கோவுடன் 1935 டிசம்பரில் பேசிய போது ட்ராட்ஸ்கி ஜெர்மன் நாஜிக் கட்சியின் தலைவர் ஒருவருடன் செய்துள்ள ஒப்பந்தம், ஜெர்மனுக்கு சோவியத்தின் சில பகுதிகளை கொடுக்கவும், ஜெர்மன் முதலாளிகள் ரஸ்யாவில் தொழில் தொடங்க சலுகைகள் அளிக்க, யுத்த காலத்தில் ஜெர்மனியின் தேவைகேற்ப்ப சோவியத்துக்கு எதிரான பணிகளை செய்தல் என சோவியத் மக்களுக்கு எதிரான சதிகள் வெளிபடுத்தினர்.

இன்று 4ம் அகிலம் ட்ராட்ஸ்கிசம் என்றால் அவை மார்க்சியமாகுமா? மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி உயிர் வாழும் பாசிஸத்தை ஆரத் தழுவிய ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியே அல்ல இவன் எதிர் புரட்சியாளனே….

தோழர் லெனின் மறைவிற்குப் பின் அவரது கருத்துக்களை எதிர்த்தோரை அரசியல் சித்தாந்த ரீதியில் எதிர்ப்பதில் ஸ்டாலின் முன் நின்றார். தனி ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியமே என்பதை கட்சிக்குள்ளும் வெளியிலும் பேசி எழுதி அணி திரட்டினார்.

லெனினிசத்தின் அடிப்படைகள் என்னும் நூலை எழுதினார். இது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இன்றளவும் உதவுகிறது. லெனினியத்திற்கு மாற்றாக ட்ராட்ஸ்கியிசம் முன் வைக்கப்பட்டதை இந்நூலில் முறியடித்தது.

ட்ராட்ஸ்கியத்தை தோல்கொடுக்கும் சிலர்.

Annupurselvaraj Selvaraj

மீண்டும் பொய்யையே வாந்தி எடுக்கிறீர்களே Mr.Ravindran அவர்களே. லெனினுக்கு பிந்தைய மூன்றாவது அகிலத்தின் தலைவர்களின் நிலைப்பாடும், மார்ஷல் ஸ்டாலின் நிலைப்பாடும்
(1.பாட்டாளி வர்க்க சர்வதேசியம் கைவிட்டது.
2.வர்க்க போராட்டம் கைவிட்டது.
3.ஐ.நா.நிறுவியது
4.கம்யூனிஸ்ட் அகிலம் கலைப்பு
5.ஜனநாயக மத்தியத்துவம் நிராகரித்தது.)
மார்க்சியம் அல்ல முதலாளித்துவ நிலைப்பாடு என்பதையே
இந்திய கம்யுனிஸ்டு லீக் (சர்வதேசியம்) பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.
அதை மூடி மறைத்து விட்டு மார்க்சியத்தின் மீது தாக்குதல் தொடுப்பதாக அறிவு நாணயம் ஏதும் இன்றி கதை விடுகிறீர்களே.
மார்க்சிய கோட்பாட்டில் இருந்து ஸ்டாலினை மதிப்பிடுவதற்கு மாறாக
மார்க்சியம்-லெனினிசம் பெயரால் ஸ்டாலின் புகழ் பாடுவதும்,
சூழ்நிலையை காரணம் காட்டி கொள்கையை கைவிட்டு ஏகாதிபத்திய வாதிகளுடன் கைகோர்த்து கொண்டது (கொள்வது)தான் இயங்கியல், மார்க்சியம் என்று மார்க்சியத்திற்கு
புதிய விளக்கம் கொடுக்கிறீர்கள்.
அன்று மார்க்சியத்தின் பெயரில் ஏகாதிபத்தியத்திற்கு ஜனநாயக முலாம் பூசினார் உங்கள் தலைவர் மார்ஷல் ஸ்டாலின்.
இன்று அவர் வழியில்
அவரது சீடரான நீங்கள் அதே பணியை தொடர்கிறீர்கள்.

Annupurselvaraj Selvaraj சற்று இதற்க்கான பதில்கள் அன்றைய சோவியத் கொடுத்துள்ளது அதனை நீங்கள் வாசித்திருந்தால் புரிந்திருக்கலாம், பரவாயில்லை நீங்கள் புரிந்திரிக்காவிட்டால் அல்லது வாசித்திருக்காவிட்டால் என்னால் இயன்றளவு எழுதியுள்ளேன் வாசித்து பாருங்களேன் மேலும்.....உங்களை ஸ்டாலினை யார் சுமக்க சொல்கின்றனர் அவர் எங்கள் தலைவர்தான் அதனால் நாங்கள் அவரை ஏற்கிறோம். அவர் உங்கள் தலைவர் இல்லையே அப்படி என்னும் பொழுது நீங்கள் ஏன் உங்களின் தலைவரை பற்றியும் உங்களின் தத்துவம் பற்றியும் பேசுவதில்லை? உண்மையில் உங்களுக்கு திறன் இருந்தால் உங்கள் தலைவரின் படத்தை போட்டு அரசியல் பேசுங்கள் அப்பொழுது நாங்களும் உங்களுடன் ஆரோக்கியமாக விவாதிக்க முடியும். நீங்கள் (உங்கள் சித்தாந்தம்) யார்? உங்களின் செயல் என்னே என்பதனை தெளிவுபடுத்தி விட்டு பேசினால் சிறப்பாக இருக்கும். மார்க்சிய ஆசான்களை அன்றைய சோவியத் எதிர்கள் முதல் ஏகாதிபத்திய ஏஜெண்டுகள் ஈறாக வசைமாறி பொழிவதையே தொழிலாக கொண்டுள்ளனர் ஆனால் அவர்களின் எண்ணம் என்னவோ மார்க்சியத்தை மறுப்பதும் சீர்குழைபதும்தான் நீங்கள் அந்த வரிசையில் நின்றுக் கொண்டு யாருக்காக சேவை செய்கின்றீர் அதை மட்டும் புரிய வையுங்கள்.

Annupurselvaraj Selvaraj

பொய் பிரச்சாரத்திற்கு புகழ் பெற்ற கோயபல்ஸை மிஞ்சும்
திருவாளர் Ravindran அவர்களே.
ஸ்டாலின் காலம் வரை சோசலிசம் கொடி கட்டிப் பறந்த ரஷ்யா குருச்சேவ் ஆட்சிக்கு வந்தவுடன் முதலாளித்துவமாக மாறிவிட்டது என்று தான் ஸ்டாலின் வாரிசுகள் கூறினார்கள்.ட்ராட்ஸ்கியவாதிகளால் மாறிவிட்டது என்று கூறவில்லை.
சீனாவில் மாவோ இருந்தவரை சரியாக இருந்தது டெங் வந்தவுடன் முதலாளித்துவமாக மாறிவிட்டது என்று தான் கூறினார்கள்.ட்ராட்ஸ்கியவாதிகளால் மாறிவிட்டது என்று கூறவில்லை.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி முதன் முதலில் பிளவுபட்ட போதும் குருச்சேவ் திருத்தல் வாதத்தை எதிர்த்து மாவோவின் வழியை ஆதரித்து சி.பி.எம் உருவானது.அப்போதும் இதற்கு காரணம் ட்ராட்ஸ்கியவாதிகள் தான் என்று யாரும் கூறவில்லை.
அடுத்து
எம்.எல்.இயக்கம்
பிளவுபட்ட போதும் இதற்கு காரணம் ட்ராட்ஸ்கியவாதிகள் என்று யாரும் கூறவில்லை.
தொடர்ந்து லிபரேஷன்,
மக்கள் யுத்தம்,
ரெட் ஃபிளாக், மாவோயிஸ்ட் கட்சி,SUCI,
TNOC, போல்ஸ்விக் குழு, SOC இன்னும் பல்வேறு மா.லெ.குழுக்கள் இந்தியா முழுவதும் சிதைந்து போய் கொண்டிருப்பதை அனைவரும் அறிவர்.
ஆனால் அத்தகைய பிளவுகள் ஏற்படும் போதெல்லாம் எந்த ஒரு குழுவும் இந்த பிளவுகளுக்கு காரணம் ட்ராட்ஸ்கியவாதிகள் தான் என்று கூறவில்லையே.
மேலும் இந்த குழுக்களின் தலைவர்கள் குறுங்குழுவாதிகளாக இருப்பதற்கு காரணம் ட்ராட்ஸ்கிய நிலைப்பாடுகள் தான் என்று கூட யாரும் கூறவில்லை.
மேலும் 90களில் ரஷ்யா சிதைந்த போதும் கார்ப்பச்சேவ் கலைப்பு வாதம் தான் காரணம் என்று தானே உங்கள் முன்னால் தலைவர் கோதண்டராமன் கூறினார்.ட்ராட்ஸ்கிய
வாதத்தால் சிதைந்து போய் விட்டது என்று கூறவில்லை.
ஏன் ஏ.எம்.கோதண்டராமன்உங்களைவெளியேற்றும் போது கூட ட்ராட்ஸ்கியவாதி என்று கூறி வெளியேற்றவில்லை.
மாறாக தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்,
ஏகாதிபத்திய ஏஜெண்ட் என்று தானே வெளியேற்றினார்கள்.
இப்படி ஒரு முக்கால் நூற்றாண்டாக உலக, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் கலைந்ததற்குகுருச்சேவ திருத்தல் வாதமும்,கார்ப்பச்சேவ் கலைப்பு வாதமும் தான் காரணம் பாராயணம் படித்து விட்டு இன்றைக்கு வந்து இந்தியாவில் புரட்சிகர கம்யுனிஸ்டு கட்சியை கட்ட ட்ராட்ஸ்கியவாதிகள்
தடையாக இருக்கிறீர்கள் என்று புளுகுகிறீர்கள்.
புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில் தான் புரட்சிகர கட்சி கட்ட முடியும்.
புளுகு மூட்டைகளை கொண்டு புரட்சிகர கட்சியை கட்ட முடியாது. 

இதற்க்கு பதிலாக நான் கட்சி கட்டுவதில் இங்கு ஏற்பட்ட பின்னடைவுகளை வேறோரு பதிவில் எழுதியுள்ளேன் வாசித்தால் சிறப்பாக்கா புரிந்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்..





ஏகாதிபத்திய கள்ள குழந்தையே ட்ராட்ஸ்கியம்-1

 

பல நாட்களாக எழுத நினைத்தும் நிறைவேறாமல் இருந்த இந்த எழுத்தை குறிபிட்ட அளவில் தயார் ஆன நிலையில் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன். இதனை முழுமையான உடன் PDF  வடிவிலும் வெளிக் கொணர்வேன்

ரசிய புரட்சியை பல சந்தர்ப்பவாதிகளும் இடைநிலை வாதிகளும் ஆதரிப்பது போல் நடித்தனர். நான்காண்டு உள்நாட்டு போர், வெளிநாட்டு சக்திகளின் தலையீடு, வெண்படையினரின் கலகம் போன்ற சோதனைகளில் அவர்கள் மூக்கை நுழைத்தனர். அதில் ஒருவர்தான் ட்ராட்ஸ்கி. இன்று அவரின் சிஸ்யர்கள் மார்க்சியவாதிகளை குழப்புவதில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் முன் வைத்துள்ள கேள்விகளை பார்ப்பதற்க்கு முன்னர் இவர்களை பற்றி சிறிது தெரிந்துக் கொள்வோம்.

ட்ராட்ஸ்கியம் என்றால் என்ன ட்ராட்ஸ்கியத்தின் அன்றைய  பணி என்ன என்பதை இங்கே விவாதத்திக்க போவதில்லை ஆனால் இங்கு கேள்வி கேட்க்கும் அவர்களை பற்றி சிறிது தெரிந்துக் கொள்வோம்.

இன்று சர்வதேச அளவில் ஏகாதிபத்திய சக்திகள் மேலோங்கி உள்ள நிலையில் சோசலிச நாடுகளே இல்லாத சூழலில், பொதுவுடமை இயக்கங்கள் பின்னடைவை சந்தித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிச பொதுவுடமை இயக்கங்கள் சிறு சிறு குழுக்களாக பிரிவுகளாக பிரிந்து உள்ள காலகட்டத்தில்....அவற்றை ஒன்றுபடுத்த அவற்றுக்கான சரியான வழி காட்டுதல் என்பது மார்க்சிய வகைப்பட்டது தான் மார்க்சியத்தை புறக்கணிக்கும் மார்க்சிய விரோத ஏகாதிபத்திய பிரச்சாரமாக இனி சோசலிசம் சாத்தியமில்லை    மார்க்சியம் தோற்றுவிட்டது கூப்பாடு போடுவார் யாராக இருப்பர் அதனை பற்றி பேசுவோம் மார்க்சிய ஆசான்களை குறை கூறுபவரும் கொச்சைபடுத்துவோரும் பற்றி.

அன்று தமிழகத்தில்  சில புரட்சிகர அமைப்புகளில் முன்னணி தோழர்களாக இருந்தவர்கள் இன்று அன்றைய ஏகாதிபத்தியக் கள்ளக் கூட்டாளியான ட்ராட்ஸ்கியத்தை தூக்கி நிறுத்துகின்றனர். அன்று டாராட்ஸ்கி செய்த அதே வேலையை இவர்கள் செய்கின்றனர் . இருந்தும் அன்று சோசலிச முகாம் இருந்ததால் அவரின் குரல் நேரடியாக ஒலிக்காமல் ஏகாதிபத்தியத்தின் பின்னாலிருந்து ஒலித்ததுஏகாதிபத்தியதோடு கூட்டுச்சேர்ந்து சோவியத்தை காட்டிக் கொடுத்து அதை ஒழித்துக் கட்டுவது மட்டுமே தனது சித்தாந்தத்தை நிலை நிறுத்த முனைந்தார் அன்றைய ட்ராட்ஸ்கி.   இன்றோ ட்ராட்ஸ்கியத்தை நிலைநிறுத்த முனைபவர்கள் மார்க்சியத்தை வேரோடு சாய்க்க நினைக்கின்றனர்

மார்க்சியத்தின் ஆசான்களையே கலைப்பு வாதிகள் மார்க்சிய விரோதிகள் துரோகிகள் என்று குற்றம் சாட்டும் இவர்கள் இந்தப் பணியை யாருக்காக செய்கின்றனர். அப்படி குற்றம்சாட்டுவதற்கான ஆய்வறிக்கை எங்கிருந்து கிடைத்தது இவர்களுக்கு. மார்க்சியத்தை கொச்சைப்படுத்தும் ஒருவர் மார்க்சியவாதியாக இருக்க முடியாது என்பது எனது முதன்மையான வாதம். இது போன்ற மார்க்சிய விரோத ஏகாதிபத்திய ஏஜெண்டுகளை அம்பலப்படுத்துவது ஒவ்வொரு மார்க்சியவாதியின் கடமையாகும் என்று நினைக்கின்றேன்.

இன்று தர்மபுரியை தலைமையகமாகக் கொண்ட ட்ராட்ஸ்கிய வாதிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை ஸ்தாபகரான ஒருவர் முன்னாள் புரட்சியாளராக அன்றைய போல்ஸ்விக் (PW) அமைப்பில் இருந்தவர் தானே. அப்படி எனில் அவரது 30 ஆண்டுகால அந்த அமைப்பின் செயல்பாடும் அவர் உண்மையான செயலும் என்னவாக இருக்கும் என்று அறிய வேண்டியவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. 

தாங்கள் ஏதோ மார்க்சியவாதிகளாகவும் தாங்கள் பேசுவது மட்டுமே மார்க்சியம் என்றும் குழப்பிக் கொண்டுள்ள அவர்களின் உண்மையான முகத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டுய தேவையும் உள்ளது.

இன்று இவர்கள் பேசும் பல விஷயத்தை அன்று ஒருத்தர் மட்டுமே பேசினார் அவர் தான் ட்ராட்ஸ்கி. ஏன் இவர்கள் அவரின் படத்தை பயன்படுத்துவதில்லை மார்க்சிய ஆசான்களின் படத்தை பயன்படுத்துகின்றனர் ? ஏனென்றால் அவர் அன்றே அம்பலப்பட்டு கேவலப்பட்டு போய்விட்டார் அன்றே. ஆகையால் இவர்கள் மார்க்சிய வேடமணிந்து மார்க்சியத்தை குழப்புதல்  மட்டுமே தொழிலாக கொண்டுள்ளனர்

இவர்களின் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளை தேடி பேசுவதைவிட பொதுவாக இவர்களின் நிலைப்பாட்டை மார்க்சிய அடிப்படையில் பேசுவோம் விளக்கமளிக்க முயற்சிப்போம் இவர்களின் மார்க்சிய விரோத போக்கு நாளோரு வண்ணம் பொழுதொரு மேனியாக வளர்ந்துக் கொண்டேயிருப்பவை.

சரி ட்ராட்ஸ்கியவாதிகள் குற்றச்சாட்டு முக்கியமாக என்ன என்று பார்ப்போம்:-

1).அகிலம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு தனி நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி நடத்த முடியாது என்பர் .

2).அகிலத்தை ஸ்டாலின் கலைத்தது தவறு அவர் ஒரு கலைப்புவாதி மாவோ அகிலத்தை கட்டவில்லை அவரும் கலைப்புவாதி என்கின்றனர் .

3).ஐநாவில் சேர்ந்தமை முதலாளித்துவ ஏகாதிபத்திய  கூட்டு சேர்ந்தார் இவை ஸ்டாலின் மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு .

இனி பதிலாக.....

பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை பற்றிய கம்யூனிஸ்டுகள் யாரும் மறுப்பதற்கில்லை இது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களைக் கையாள வேண்டியிருந்திருக்கிறது

முதலாம் அகிலமும் பாரிஸ் கம்யூனும்

முதலாம் அகிலத்தின் வாரிசாக பாரிஸ் கம்யூனும் , பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்தின் முன் மாதிரி வடிவமான கம்யூனும் இருந்தது .

பாரிஸ் கம்யூனுக்குப்பிறகு அகிலம் சட்டரீதியாக இயங்க முடியாமல் போனதாலும் , போலீஸ் அடக்குமுறையாலும், தலைவர்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரத்தினாலும் முதலாம் அகிலம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது .முதல் அகிலம் 12 ஆண்டுகள் செயல்பட்டது .(1864- 1876)

1871ல் பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. அவை 72 நாட்கள் மட்டுமே நீடித்தது. முதலாளித்துவ சக்திகளின் கூட்டுசதியால் ரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டது.

பாரிஸ் கம்யூன் தோல்வியிலிருந்து மார்க்ஸ் எங்கெல்ஸ் படிப்பினைகளை தொகுத்தளித்தனர் .அந்தத் தொகுப்பு உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு பெரும் சேவை ஆற்றுவது அதன் சுருக்கம் கீழே..

முதலாளித்துவ அரசு எந்திரத்தை தகர்த்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது அவசியம்.

மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் அவசியம் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்குப் பின்னும் அப்படியே இருக்கிறது, முதலாளி வர்க்கத்தை அரசியல் ரீதியில் ஒடுக்குவதற்கு அது தேவைப்படுகிறது .

பொருளாதார நடவடிக்கைகளும், உற்பத்தியில் நிகழும் அராஜகத்தை அகற்றுவதற்கும், உற்பத்தியின் சமூக வடிவங்களை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் இசைவோடு ஒரு நிலைப்படுத்தவும் மாற்று கலாச்சார கட்டுமானத்துக்கும் அது அவசியம் .

மாற்றங்கள் அனைத்தும் ஒரே அடியில் நிறைவேறாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளும்மனிதர்களும் மாறுவதற்கு மாபெரும் சக்திகளும், வெகு காலம் தேவைப்படும் .

தொழிலாளி வர்க்க ஆட்சி வருவதால் வர்க்கப் போராட்டம் அகற்ற படுவதில்லை மாறாக வர்க்கப் போராட்டம் தனது பல்வேறு கட்டங்களின் மூலம் மிகவும் விவேகமான மனிதாபிமானமுள்ள பாதையில் நடைபெறுவதற்கான விவேகமான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது

முதலாம் அகிலம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டதால் மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை கைவிட்டனர் என்றோ, புரட்சியை காட்டிக் கொடுத்தனர் என்றோ, கலைப்பு வாதிகள் என்றோ, உலகில் யாரும் விமர்சனங்களை முன்வைக்க வில்லை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பாட்டாளி வர்க்கமும் அதன் கட்சியும் எப்படி செயல் திட்டங்களை அமைத்து வடிவத்தையும் பின்பற்றுகிறது என்பதை பொறுத்து அந்த இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி அமைந்துள்ளது. எனவே அன்றைய சூழ்நிலையில் முதலாம் அகிலம் கலைக்கப்பட்டது சரியானதே. ஏனென்றால் சூழ்நிலை பற்றிய மதிப்பீட்டையும் சக்திகள் பற்றிய மதிப்பீட்டையும் கொண்டு சமூக புரட்சியை முன்கொண்டு சென்றனர்  நமது ஆசான்கள் .

இரண்டாம் அகிலமும் சர்வதேச சூழலும்

முதலாம் அதிலும் கலைக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப்பின் மாமேதை மார்க்ஸ் எங்கெல்ஸ் மற்றும் உலகப் பாட்டாளி வர்க்க சக்திகளுடன் இணைந்து இரண்டாம் அகிலம் உருவாக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்தது. மார்க்சியம் எல்லா நாடுகளிலும் பரவி இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இலட்சக்கணக்கான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

அதேநேரம் பல நாடுகளில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முதலாளித்துவ சட்டத்தைப் பயன்படுத்தி வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தற்கு பதிலாக சட்டத்தை வழிபடும் சட்ட வாதிகளாக சீரழிந்து சந்தர்ப்பத்தில் மூழ்கியிருந்தனர்

இரண்டாம் அகிலத்தின் காலகட்டம் முழுவதும் சர்வதேச பாட்டாளி வர்க்கம் புரட்சிகர மார்க்சிய வாதிகள் என்றும் சந்தர்ப்பவாதிகள் என்றும் இரண்டு பிரிவுகளாக இருந்தனர். சந்தர்ப்பவாதிகளை எதிர்த்து எங்கெல்ஸ் கடுமையான போராட்டத்தை நடத்தி வந்தார் .

முதலாளித்துவம் அமைதியான முறையில் சோஷலிசம் ஆக மாறும் என்ற கட்டுக் கதையும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற பித்தலாட்டம் இன்னும் பல சந்தர்ப்பவாத போக்குகளும் இரண்டாம் அகிலத்தில் நிலவியது.  1895இல் எங்கெல்ஸ் இறந்தபிறகு அகிலத்தின் தலைமை சந்தர்ப்பவாதிகள் கைகளுக்கு சென்றது

இச்சூழ்நிலையில் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான போராட்டத்தை முன்கொண்டு செல்ல மாமேதை லெனின் பொறுப்பானது.

சர்வதேச அளவில் சந்தர்ப்பவாத போக்குகளை எதிர்த்துப் போரிட்ட லெனின், சோவியத் ரஷ்யாவில் பிரிந்து கிடந்த குழுக்களை இணைத்து பலம்வாய்ந்த ஒரு புரட்சிகரமான கட்சியை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்

முதலாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பே  லெனின் இரண்டாம் அகில தலைவர்கள் மற்றும் அவர்களின்  சந்தர்ப்பவாததிற்க்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்தினார் .

அன்று ஏகபோக முதலாளி வர்க்கம் தங்களுக்கு கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தி தொழிலாளர்கள் மற்றும் அதன் தலைவர்களின் ஒரு பிரிவினரை தன்வசம் ஆக்கிக் கொண்டது. தொழிலாளர் உயர்குடியினர் தொழிற்சங்கவாதிகள் அடங்கிய ஒரு பிரிவு உருவாகிக் கொண்டிருந்தது .

வாழ்க்கை முறையிலும் சம்பளத்தில் உலக கண்ணோட்டத்திலும் என அனைத்திலும் முதலாளிய தன்மை கொண்ட இந்த பிரிவு பாட்டாளி வர்க்கத்தின் குட்டி முதலாளிய துணையுடன் சேர்ந்து, தொழிலாளி வர்க்க   இயக்கத்தில் சந்தர்ப்பவாத போக்குகளை உருவாக்கினர். இந்த சந்தர்ப்பவாதம் இரண்டாம் அகில கட்சிகளை மேலும் சீரழித்தது .

ஆனாலும் இரண்டாம் அகிலம் முழுவதற்கும் வரப்போகிற  யுத்தம் பற்றியும்யுத்தம் வந்தால் பாட்டாளி வர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் 1912 இல் இரண்டாம் அகில காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட பாசேல் அறிக்கை , உலக யுத்தம்  சம்பந்தமாக ஒரு பொது வழியை முன்வைத்தது அதன் சாரம் கீழே ...

இந்த யுத்தம் கொள்ளைக்கார தன்மை கொண்டு ஏகாதிபத்தியம்

யுத்தத்தை எதிர்த்து போராட வேண்டும் .

யுத்த எதிர்ப்பு சக்திகள் ஒன்றுபடுத்த வேண்டும் .

யுத்தம் மூண்டால் அதைப் பயன்படுத்தி அந்த நாட்டு ஆளும் கும்பலுக்கு எதிராக உள்நாட்டு யுத்தம் நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்

ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடைபெறும் இந்த யுத்தத்தை பயன்படுத்தி உள்நாட்டு யுத்தத்துக்கு தயாரிப்பு செய்திட வேண்டும் .

ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு  மாற்றாக உள்நாட்டு யுத்தங்கள் என்ற சர்வதேச பொது வழியை முன்வைத்தது .

இடதுசாரி செல்வாக்கினால் இரண்டாம் அகிலம் யுத்தத்திற்கு முன் வரை சரியான தீர்மானங்களை ஏற்றுக்கொண்டது. ஆனால் யுத்தம்  வந்தவுடன் அதன் வலதுசாரி தலைவர்களின் நடைமுறை முதலாளித்துவக் கொள்கைக்கு சேவை செய்தது

 முதலாம் உலகப் போர் காலகட்டத்தில் சர்வதேசமும் மற்றும் தொழிலாளி இயக்கம் மூன்றுவித போக்குகள் நிலவின அவையாவன ...

சமூக தேசியவெறி போக்கு- சமூக தேசிய வெறியை கொண்டவர்கள் வர்க்கங்களுக்கு இடையே சமாதானமும் கொள்ளைக்கார யுத்ததில் தாய்நாட்டின் தற்காப்பு தான் முக்கியம் என்றனர் .

மையவாதம்-மைய வாதிகளோ  சொல்லில் சோசலிசம் ,செயலில் சமூக வெறியர்களாக இருந்தனர் .சந்தர்ப்ப வாதத்தை மார்க்சிய சொற்களால் அலங்கரிக்கும் இவர்களின் போக்கு மிக அபாயகரமாக இருந்தது .

புரட்சிகர போக்கு-புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் பாதையை உயர்த்தி  பிடித்து இவர்கள் உண்மையான சோசலிஸ்ட்களாவர்

முதலாம் உலக யுத்தம் தொடங்கியவுடன் இரண்டாம் அகிலத்தில் பெரும்பாலான கட்சிகள் பாசேல் அறிக்கைக்கு எதிராக சந்தர்ப்பவாத நிலையை மேற்கொண்டனர் .

யுத்தத்திற்கு எதிராக ஜெர்மன் பாட்டாளி வர்க்க  புரட்சியாளர் லீப்னெக்ட் பாராளுமன்றத்தில் யுத்தத்திற்கு எதிராக வாக்களித்தார், செர்பிய சோசலிஸ்ட்கள் நாடாளுமன்றத்தில் யுத்த கடன்களுக்கு எதிராக வாக்களித்தனர் . ரஷ்யாவின் நான்காவது டூமாவில் யுத்தற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .யுத்த கடன்களுக்கு எதிராக போல்ஷ்விக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர் .

ஏகாதியாபத்திய  போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற பாசேல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் நடவடிக்கை இருந்தது . இந்த முழக்கத்தை பலரும் பலவிதமாக தாக்கினர். காவுத்ஸ்கி யுத்த காலத்தில் சமாதான போராட்டம், சமாதான காலத்தில் வர்க்கப் போராட்டம் என கூறினார். உலகத் தொழிலாளர்களே சமாதான காலத்தில் ஒன்றுபடுங்கள் யுத்த காலத்தில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்ளுங்கள் என தெளிவாக சொல்லி இருக்கலாம் என ரோசா லக்சம்பர்க் அவரை நையாண்டி செய்தார் .

ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டுப் போராக மாற்றியதன் மூலம் ரஷ்யாவில் 1917 அக்டோபர் 25 இல் ஜார் அரசு தூக்கி எறியப்பட்டு சோசலிச புரட்சி நடந்தது இவ்வாறாக உலகில் ஆறில் ஒரு பகுதியில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்பட்டது. இரண்டாம் அகிலத்தில் வழிகாட்டல் இல்லாமல் தனி ஒரு நாட்டில் தன்னந்தனியே சோஷலிஸம் நிலைநாட்டப்பட்டது. இந்த சோசலிசப் புரட்சியை ரஷ்ய புரட்சியை மறுக்கும் ட்ராட்ஸ்சிய நிலைப்பாடு உள்ளவர்கள் அன்றைய தனி ஒரு நாட்டின் புரட்சியை ஏற்க மறுக்கின்றனர் ஆக இவர்கள் மார்க்சியத்தை அடிப்படையில் மறுக்கும் இயக்க மறுப்பியல்வாதிகள் ஆவர்

1916 ஏப்ரல் 24 முதல் 30 வரை இரண்டாவது சிம்மர்வால்டு மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள கிந்தல் என்ற இடத்தில் நடைபெற்றது. இதற்கு முன் நடந்த மாநாட்டில் முதலாளித்துவ அரசை வீழ்த்தி சோசலிசம் படைக்கப்படும் பொழுது யுத்தம்  தவிர்க்கப்பட முடியும் என லெனின் அவர்கள் ஆதரவாளர்களும் கருதினர் .காவுட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் இதனை ஏற்கவில்லை. புரட்சிக்கு ஏற்ற தருணம் இதுவல்ல என வாதிட்டனர்.மேலும் மாநாடு பொது சமாதானத்தை மட்டுமே ஆதரிக்க முடியும் என்றும் இரண்டாம் அகிலத்துக்கு மாறாக புதிய அகிலம் உருவாகக் கூடாது என்றும் வாதிட்டனர். ஆனாலும் லெனின் அவர்கள் இந்த மாநாட்டை மூன்றாம் அகிலத்துக்கான முதல் அடி வாய்ப்பு என்று அழைத்தார் .

ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகள் சமாதானம் பற்றிப் பேசினர் ஏனென்றால் யுத்தம் தொடர்ந்தால் பல நாடுகளில் புரட்சி வெடிக்கும் அபாயம் பற்றி முதலாளிய சக்திகள் அச்சம் கொண்டனர். இந்த சக்திகளுக்கும் வலதுசாரி சக்திகளுக்கும் உறவு ஏற்பட்டு புரட்சிப் போராட்டம் கைவிடப்பட்டது .

ரசிய புரட்சியானது வலது இடது சக்திகளுக்கு இடையே ஆழமான பிளவை உண்டு பண்ணியது .ரஷ்யாவில்   ஏகாதிபத்தியப் போர் உள்நாட்டுப் போராக மாறத்தொடங்கியது அன்றைய சூழலில் ருசியா பாட்டாளி வர்க்கம் மட்டுமே மிகப்பெரிய புரட்சி ஆற்றலைப் பெற்று இருந்தது

லெனினியத்தின் கொள்கை சர்வதேச மதிப்புள்ளதாக மாறியது. மார்க்சியத்தின் நிலைப்பாடுகளை நடைமுறையில் நிரூபித்தது அக்டோபர் புரட்சி. சந்தர்ப்பவாததின் மீது லெனினிய வெற்றியாக அமைந்தது. அக்டோபர் புரட்சி மூன்றாம் அகிலம் அமைப்பதற்கான சூழல் மிகவும்  பிரகாசமாக இருந்தது .

மாமேதை லெனின் அவர்கள் ஏகாதிபத்திய காலகட்டத்தில் முக்கியமான முடிவுகளை வளர்த்தெடுத்தார்

ஏகாதிபத்திய முரண்பாடுகள் கூர்மையடைந்து வர்க்கப் போராட்டம் வளர்ச்சி பெற்றதாகவும் இருந்தது மாமேதை லெனின் அவர்கள் மார்க்சியத்தை ஏகாதிபத்திய காலப்பகுதிக்கு ஏற்றவகையில் வளர்த்தெடுத்தார் .

தனி நாட்டில் சோசலிசம் சாத்தியமே 

தொழிலாளி வர்க்கம் விவசாய வர்க்கத்துடன் நிலையான கூட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்

ஜனநாயகப் புரட்சி சோசலிச புரட்சியாக வளர்வது .

முதலாளித்துவ நாடுகளில் நடைபெறும் சோஷலிசப் புரட்சியும் காலனி நாடுகளில் நடைபெறும் தேசிய விடுதலை இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி

அரசு, யுத்தம் ,பாட்டாளி வர்க்க கட்சி ஆகிய முக்கிய பிரச்சினைகள் பற்றிய மார்க்சிய போதனைகளை லெனின் விரிவாக்கினார் வளர்த்தெடுத்தார். லெனினும் போல்ஷ்விக் கட்சியும் பெற்ற முக்கிய முடிவுகள் வர்க்கப் போராட்டத்தின் போது சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது .கம்யூனிஸ்ட் அகிலத்தின் சிந்தாந்த அரசியல் அமைப்பு துறைகளுக்கு மேற்கண்ட முடிவுகள் மிகவும் பயன்பட்டது .

அதே சமயம் அக்டோபர் சோசலிசப் புரட்சியை சந்தர்ப்பவாதிகளும் நடுநிலைவாதிகளும் ஆதரிப்பது போல் நடித்தனர். நான்காண்டு உள்நாட்டுப்போர் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு வெண்படையினர் கலகம் போன்ற சோதனைகளில் அவர்கள் மூக்கை நுழைத்து சோவியத்தை கவிழ்க்க பார்த்தனர். அவர்களின் முக்கிய நோக்கம் சோவியத் புரட்சியை உலகம் அறியக் கூடாது குறிப்பாக ஐரோப்பாவில் அது பரவி விடக்கூடாது என்பதுதான்

அன்றைய சூழ்நிலையில் சோவியத் விரோத கருத்துகளின் தத்துவ ஆசிரியராக காரல் காவுஸ்க்கி இருந்தார்.  1918ல் காவுஸ்க்கி ஒரு நூலை வெளியிட்டர், அந்நூலில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார திரித்து புரட்டி ருசியப் புரட்சி அவதூறு செய்யப்பட்டது . யுத்தத்தால் ஏற்பட்ட ஆபாத்தை விட சோவியத்புரட்சி ஆபத்தானது எனவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடும்படி அந்நூலில் இருந்தது .(இவர்தான் இரண்டாம் அகில  தலைவர்களில் ஒருவர்) .

இதை எதிர்த்து லெனின் அவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஓடுகாலி காவுஸ்க்கியும் என்ற நூலை எழுதி வெளியிட்டார் .புரட்சிகர தத்துவம் யுத்த தந்திரம் செயல்தந்திரம் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை பற்றிய கோட்பாடுகளை படைப்பு தன்மையுடன் விரிவுபடுத்தியதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சிறந்து விளங்கியது .உலகப் புரட்சி பற்றி பேடித்தனம் ஆக (ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை )பேச்சுகளை அது விட்டொழிந்ததுஎல்லா நாடுகளிலும் புரட்சி வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது விழிப்படைய செய்வது, ஆகிவற்றின் பொருட்டு ஒரு நாட்டின் சாத்தியமான அதிகபட்ச நடவடிக்கைகளை சோவியத் கட்சி மேற்கண்டது எல்லா நாடுகளிலும் புரட்சிகரமான கட்சியை நிறுவுவதும் அதற்கு உதவிகள் அளிப்பதையும் சோவித் கட்சி மேற்கொண்டது .

மூன்றாம் அகிலத்தின் தேவையை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக முன்வைத்தது

1919 மார்ச் 4ல் அகிலத்தின் முதல் காங்கிரஸ் கூடியது இரண்டாவது அகிலம் செய்த வேலைகளின் பயன்களை ஏற்றுக்கொண்டது, அதன் சந்தர்பவாதத் திலிருந்து முறித்துக்கொண்டு மூன்றாம் அகிலம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை செயல்படுத்த தொடங்கியது .

மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டுதலில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைக்கப்பட்டது .புரட்சிகர குழுக்களும் அகிலத்தில் சேர விருப்பம் தெரிவித்தன. பல கட்சிகள் இரண்டாம் அகிலத்துடன் உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொண்டனர்.

மூன்றாம் அகிலத்தின் இரண்டாம் காங்கிரஸ் துவங்கும் தருவாயில் "இடதுசாரி கம்யூனிசம்  இளம்பருவக் கோளாறு" எனும் நூல்  வெளியிட்டபட்டது.

கம்யூனிஸ்ட் கட்சிகளை சித்தாந்த ரீதியிலும் ஸ்தாபனம்  ரீதியிலும் திடப் படுத்துவதற்கும் புரட்சிப் போராட்டத்தில் சிறந்த தலைவர்களாக மாற்றுவதற்கு இடதுசாரி போலி பேச்சு வறட்டுவாதம் பிரிவு வாதம் ஆகியவற்றை களைவது அவசியமானது .

புரட்சியை நடத்துவதில் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த பொறுமையின்மை அரசியல் முதிர்ச்சியின்மை, ருசியாவில் புரட்சி நடத்தற்கான எல்லா புற அக சூழ்நிலைகளைக் கணக்கில் கொள்ளாமல் விரைவில் புரட்சியை நடத்த வேண்டும் என்ற ஆர்வம் முதலியவை இடது துணிச்சல் வாததுக்கு காரணமாக இருந்தது அந்த இடது துணிச்சல் வாதத்தின் வர்க்க வேர்கள் குட்டி முதலாளித்துவ சிந்தனையே.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவிய வலது சந்தர்ப்பவாதம் மற்றும் இடது துணிச்சல்வாததிற்க்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகளை அரசியல் மற்றும் அமைப்பு ரீதியிலும் திடப்படுத்தும் பணியை லெனின் மூன்றாவது அகிலத்தில் மேற்கொண்டார். இதையொட்டி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல்தந்திரம் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டி வந்தது .

அரசின் எல்லா வர்க்க சக்திகளையும் நிதானமாக கண்டிப்பான யதார்த்த நோக்கில் கருத்தில் கொண்டு உலக அளவில் இந்த சக்திகளின் வரிசைக் கிரமத்தை கணக்கிலெடுத்துக் கொண்டு அதனடிப்படையில் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் .

ஒரே ஒரு குழு அல்லது அமைப்பின் விருப்பத்தையும் கண்ணோட்டங்களையும் அரசியல் உணர்வு தரத்தையும் போராட்டத்திற்கு ஆயத்தமாய் இருக்கும் அளவையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கையை நிர்ணயிப்பது சரியல்ல என்றார் லெனின் .

எல்லா நாட்டிலும் சோசலிசம் வரும் என்பது தவிர்க்க முடியாதது ஆனால் எல்லாம் முற்றிலும் ஒரே மாதிரியாக வரமாட்டா. ஜனநாயகத்தின் ஏதோ ஒரு வடிவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் ஏதோ ஒரு வடிவில் சமூக வாழ்வின் பல்வேறு அம்சங்களில் சோஷலிச மாற்றத்தின் வேக வித்தியாசத்தில் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கே உரிய தனித்தன்மை கொண்டு வரும் என்றார் லெனின்.

இது போன்ற பல்வேறு போக்குகளில் கணக்கில் கொண்டுதான் மூன்றாம் அகிலத்தின் இரண்டாம் காங்கிரஸில் இருபத்தொரு (21)நிபந்தனைகள் முன்வைத்தது . மூன்றாம் காங்கிரசில் பிரிந்து கிடக்கின்ற சக்திகளை ஒன்று சேர்க்கும் படியும் மக்கள் வறுமையில் சிக்கித் தவிப்பதையும் பாசிஸ்ட்களின் தாக்குதல் பலமடைந்து வருவதாலும் இவற்றுக்கு எதிரான எல்லா சக்திகளையும் ஒன்றுபடுத்தி தொழிலாளர் அரசு அமைப்போம் என்ற முழக்கத்தை முன் வைக்கும்படியும் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியை கேட்டுக் கொண்டது. ஆனால் 1922இல் பாசிசம் வென்றது. தொழிலாளி வர்க்கம் ஜனநாயக சக்திகளும் தோல்வியடைந்தன

தங்கள் நாட்டில்  பாசிசத்தை ஏற்படுவதற்கான தொடக்க முயற்சிகளை அவர்கள் முழு சக்தியுடன் தடுக்கவேண்டும் இத்தாலியிலும் உலக அனைத்திலும் பாசிசத்துடன் போராடுவதற்கான சிறந்த வழி சொந்த நாட்டில் அதற்கு எதிராக ஊக்கத்துடன் போராட வேண்டும் என அகிலம் கூறியது .

ஆறாவது காங்கிரஸில் யுத்த அபாயம் பற்றிய அறிக்கை முன்வைத்தது அதில் யுத்தம் பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாடுகள் மற்றும் செயல்தந்திரம்  விளக்கப்பட்டிருந்தது . யுத்ததுக்கு காரணம் முதலாளித்துவம் என்றும் இதற்கு எதிராக போராடுகிறது என்றும்,சோசலிசம் யுத்தங்களுக்கு எதிராகப் போராடுகின்ற அதேசமயம்  நியாயமான யுத்தங்களை  மறுக்கவில்லை என்றும் கூறியது.

6 - வது காங்கிரஸில் ஆறு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது  முன்வைத்த பாசிசத்தின் தாக்குதலும் பாசிசத்துக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமைக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பணிகளும் என்ற அறிக்கை காங்கிரஸில் விசேஷ முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது அன்றைய சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிரபல தலைவராக விளங்கியதோழர் டிமிட்ரோவ் கருத்துக்கள் கீழ் வருவன

1).ஏகாதிபத்திய யுத்தத்துக்கு முன்னேற்பாடு செய்யும் பொருட்டும் புரட்சியை தவிர்க்கும் பொருட்டும் முதலாளித்துவம் பாசிசத்தின் காப்பிடம் தேடுகிறது .

2).பாசிசம் சர்வதேச அபாயமாக மாறி வருகிறது நாம் இதுவரை சந்தித்துள்ள எதிரிகளை விட கொடிய பகைவன் பாசிசம்.

3).ஜெர்மன் பாசிசம் சர்வதேச எதிர்ப்பு சக்திகளின் முன்னணி பிரிவாகும் உலகின் பிற்போக்கின் பிரதான சக்தியாகவும் ஏகாதிபத்திய யுத்த நெருப்பை மூட்டி விடுவதாவும் சோவியத்தின் ஜென்ம பகைவனாகவும் உள்ளது .

4). பாசிசம் ஏகபோக மூலதனத்தின் கடைக்கோடி பிற்போக்கு பிரிவுகளின் கைகருவி. பாசிசம் ஆட்சிக்கு வருவது ஒரு முதலாளித்துவ அரசாங்கத்துக்கு பதில் மற்றொன்று வரும் சாதாரண மறு நிகழ்ச்சி அல்ல .முதலாளிகளின் வர்க்க ஆதிக்கத்தின் ஓர் அரசு வடிவமான முதலாளி ஜனநாயகத்தின் இடத்தில் அதன் வேறு வடிவமான வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகாரம் வரும் தன்மை மாற்றம் ஆகும் .

5).முதலாளி ஜனநாயகத்துடன் ஒப்பிடும்போது பாசிஸம் பின்னோக்கிய மிகப்பெரிய அடிவைப்பு.

6).இப்போது பார்சிஸ்ட் புரட்சி எதிர்ப்பு முதலாளித்துவ ஜனநாயகத்தை தாக்குகிறது உழைப்பாளிகள் மீது அநாகரிகமான சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் அவர்களை நசுக்கவும் அது முயல்கிறது

மேலும் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் போது கிடைத்த அனுபவம் பற்றி தோழர் டிமிட்ரோவ் கீழ்க்கண்டவாறு கூறினார்.

"சமூக ஜனநாயக தலைவர்கள் கடைப்பிடித்து வந்த முதலாளிகளுடன் வர்க்க ஒத்துழைப்பு கொள்கையின் விளைவாக தொழிலாளர் வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் தாக்குதலுக்கு முன் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் ஆயுதம் அற்றதாக இருந்ததே பாசிசம் ஆட்சிக்கு வர முடிதற்கான முக்கியக் காரணமாகும் .சமூக ஜனநாயகத்தை பொருட்படுத்தாமல் அதை எதிர்த்து நின்று வெகுமக்களைத் தட்டி எழுப்பி பாசிசத்திற்கு எதிரான இறுதிக்கட்டப் போராட்டத்துக்கு அவர்களை இழுத்துச் செல்லவும் கம்யூனிஸ்ட் கட்சிகளை போதிய வலிமை பெற்றிருக்கவில்லை என தோழர் டிமிட்ரோவ் கூறினார்.

கருத்து கேட்டு அறிந்து அகிலம் கலைக்கப்படுதல் 

கம்யூனிஸ்ட் அகிலம் அமைக்கப்பட்டபோது உலகின் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தை புரிந்து கொள்வதிலும் அமைப்பு ரீதியிலும் பலவீனமாக இருந்தன. அனுபவம் மிக்க தலைமை ஊழியர்களும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் கூட்டு மைய உறுப்பான அகிலத்தின் வடிவில் எல்லா நாட்டு கட்சிகளின் கூட்டு முயற்சியின் மூலமே தங்களின் நாடுகளில் புரட்சி பணிகளையும் யுத்த தந்திர செயல் தந்திர பணிகளையும் வகுத்து செயல்பட்டனர்

மூன்றாம் அகிலத்தின் ஏழாம் காங்கிரஸ் மூலம் ஒவ்வொரு நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும். கொள்கை ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் திடப்பட்டது ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியும் வர்க்கப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் பெருத்த அனுபவம் பெற்று இருந்தன அவற்றில் உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததுமார்ச் இல் எண்ணியதால் பயிற்றுவிக்கப்பட்ட தலைமை ஊழியர்கள் அதனிடத்தில் இருந்தனர் இந்தக் கட்சிகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது எனவே தொலைபேசி நிலைமைகளையும் மரபுகளையும் கருத்தில் கொள்வது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரசியல் செயல் தந்திர தீர்மானங்களை வகுப்பதிலும் முதன்மை கவனம் எடுத்துக் கொள்வதிலும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு நாட்டினுடைய ஸ்தூலமான நிலைமைகளையும் தனித் தன்மைகளையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உள்விவகாரங்களில் ஸ்தாபன பிரச்சினைகளில் நேரடியாக தலையிடுவதை தவிர்க்க வேண்டுமென்றும் அகிலத்தின் செயற்குழு கூறியது .

யுத்தத்தின் நிலைமைகள் தனித்தனி நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுகளில் பெருத்த வேறுபாடு களும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்வகைப்பட்ட பணிகளும் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு செயல் சுதந்திரமும் சமயோசிதமும் தேவைப்பட்டது.

பாசிசத்திற்கு எதிராக எல்லா தேசபக்த சக்திகளையும் ஒன்று படுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் சுதந்திரமாக இயங்குவது தேவைப்பட்டது பாசிச எதிர்ப்பு போரில் பங்கெடுத்த சில வட்டாரங்கள் சோவியத்தையும் அகிலத்தையும் சந்தேகத்துடன் நோக்கின கம்யூனிஸ்டுகளும் ஒத்துழைக்க இவை அச்சம் கொண்டன.

பாசிச எதிர்ப்பு சக்திகளை ஒன்று படுத்துவதற்கு இருந்த எல்லா தடைகளையும் அகற்றுவது பாசிசத்தின் மீதான வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது அது மட்டுமல்லாமல் பகைவர்கள் மீது விரைவிலும் விரைவாக வெற்றி பெறும் பொருட்டு நாடு அனைத்திற்கும் உற்சாகமூட்டி மக்களை அணி திரட்டும் பணி ஒவ்வொரு தனி நாட்டின் அனைத்து தொழிலாளர் இயக்கத்தின் முன்னணி படையால் தனது அரசின் வரம்புக்குள் மிகச் சிறப்பாகவும் பயனுள்ள விதத்திலும் நிறைவேற்றப்பட முடியும் என செயற்குழு கூறியது.

இந்த நிலையில் கம்யூனிஸ்ட் அகிலம் இருந்த தனது மீதும் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது பெற்றோர்கள் அவதூறு பரப்பினர் இந்த அவதூறுகளை மிகவும் சிறப்பாக செய்தது நாஜிக்களின் பிரசாரம்  

மார்க்சியத்தை எதிர்ப்பதுதான் ட்ராட்ஸ்கியத்தின் முக்கியமான குறிக்கோளாக உள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் மார்க்சிய விரோத போக்குகளில் இவையும் ஒரு அம்சமாக உள்ளது.

ஏகாதிபத்தியம் மார்க்சியத்தை மார்க்சியத்தின் பெயரால் சிதைத்துக் கொண்டுள்ள பல்வேறு  போக்குகளில் ட்ராட்ஸ்கியமும் ஒன்று. அண்மை காலமாக முன்னாள் புரட்சியாளர்களாக இருந்தவர்கள் இன்று மார்க்சிய  வேடமணிந்து மார்க்சியத்தை குழப்பிக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக மற்றும் மார்க்சியத்தை சரியான முறையில்  இந்த சிறிய முயற்சி.

1). அகிலம் ஒன்று இல்லாமல் எந்த தனி ஒரு நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சியும் நடத்த முடியாது என்பதால் அவர்கள் முதல் சொல்ல வந்த விஷயம்.

உண்மையில் இதற்கு பதிலாக பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை பற்றிய கம்யூனிஸ்ட்கள் யாரும் மறுப்பதற்கில்லை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களைக் கையாள வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை. இதனைப் பற்றி விரிவாக காணும் முன் சில குறிப்புகளோடு சுருக்கமாக காண்போம்

1917 ரஷ்ய புரட்சிக்கு பின் அதாவது  சோசலிச அரசு படைக்கப்பட்ட பிறகு லெனின் தலைமையில் மூன்றாம் அகிலம் அமைக்கப்படுகிறது ஒரு தனி நாட்டில் சோசலிசப் புரட்சியை நடத்தி முடிப்பது என்பது உலக சோசலிச புரட்சியின் துவக்கமாக அமைகிறது. எனவே ஒவ்வொரு நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மையான பணி தன் நாட்டு அரசை தூக்கி எறிவது பற்றியும் அதற்கான திட்டம் மற்றும் செயல் திட்டங்களை வகுப்பது தான் என்பதை புரிந்து இருத்தல் அவசியமாக இருக்கும்அதேபோலதான் மூன்றாம் அகிலம் கலைக்கப்பட்ட பிறகுதான் சீனாவும் வியட்நாமும் கொரியா கியூபா போன்ற நாடுகள் விடுதலை அடைந்தன. ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏகாதிபத்திய முரண்பாடுகள் இந்த மாமேதை லெனின் அவர்கள் சோசலிச புரட்சி ஆரம்பத்தில் ஒரு சில நாடுகளில் அல்லது தன்னந்தனியான ஒரு நாட்டில் வெற்றி பெறுவது சாதி என்ற முடிவுக்கு வந்தார். 1915 ல் லெனினின் இந்த ஆராய்ச்சியானது மாற்றத்தை வளர்க்கவும் புதிய கண்டுபிடிப்பாகும் இருந்ததுஅன்றே ஒருவர் இதனை எதிர்த்தார் இருந்தும் அவர் ரஷ்ய புரட்சி புயலில் சிக்கிக் கொண்டு தானும் ஒரு புரட்சியாளனாக மேல் வந்தார். பின்னர் தனக்கு கிடைக்கும் நேரமெல்லாம் சோவியத்தை நிர்கதியாக பல்வேறு சதி திட்டங்களை தீட்டினார் அதை தான் இங்குள்ளோர் தூக்கி நிறுத்துகின்றனர் மார்க்சியம் என்று .

இந்த அவதூறுகளை நாஜிகளின் பிரசாரம் பாசிச எதிர்ப்பு கூட்டணியில் இருந்த முதலாளித்துவ வட்டாரங்களை கம்யூனிஸ்டு அபாயம் காட்டி பயமுறுத்தியது ஹிட்லர் எதிர்ப்பு கூட்டணியில் பிளவு ஏற்படுவதற்கு ஏராளமான வேலைகள் நடைபெற்றது அதுமட்டுமில்லாமல் பாசிசத்தால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் பாசிச எதிர்ப்பு தேசிய கூட்டணிகளை உடைக்கவும் இது பயன்பட்டது.

மாஸ்கோ பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது என்றது.

வெளிநாடுகளிலிருந்து வரும் ஆணைகளுக்கு ஏற்ப கம்யூனிஸ்டுகள் செயற்படுகின்றனர் என்றனர்

வேற்றார் நலனை பாதுகாக்கவும், அன்னியர் கட்சிகள் என்றும் பிற்போக்கு கும்பல்கள் பிரசாரம் செய்து வந்தது அகிலம் மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும் பலவிதமான கட்டுக்கதைகளை பரப்பி கம்யூனிஸ்ட்களிடமிருந்து வெகு மக்களை பிரித்திட ஏராளமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன .

மேற்கண்ட எல்லா பிரச்சினைகளையும் கணக்கில்கொண்டு அகிலத்தின் செயற்குழு 1943இல் அகிலத்தை கலைக்கும் பிரச்சினையும் முன்வைத்தது.

1943 மே 13 இல் அகிலத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் தலைமைக்குழு உறுப்பினர்கள் டிமிட்ரோவ் அகிலம் கலைப்பதற்கான தீர்மானத்துக்கு மசோதாவை முன்வைத்தார் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம் வேண்டும் என்றும் கூறினார் .

அகிலம் கலைப்பது அரசியல் நோக்கில் பொருத்தம் உள்ளதா?

 சாதகமான தருணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா?

அகிலம் கலைப்பு மசோதாவில் போதுமான ஆதாரங்கள் உள்ளனவா ?.

என்ற அடிப்படையில் விவாதம் நடந்ததுஅடுத்து யுத்த சூழல் காரணமாக காங்கிரஸ் கூடுவது இயலாததால் அகிலம் கலைப்பதற்கு 31 நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து பதில் அளித்திருந்தது.எல்லா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீர்மானத்தின்படி தெரிந்த பின் 3அகிலம்  கலைப்பதை 1943 ஜூன் எட்டாம் தேதியில் தலைமைக் குழு அறிவித்தது. அதை ஒட்டி தலைமைக்குழு செயற்குழு கண்காணிப்பு கமிஷன் ஆகியவை கலைக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்க  இங்கே அகிலம் கலைக்கப்பட்டதற்கு ஒரு தனிநபரின் செயல் போல சாடி அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவது ஏற்புடையவைதானா?இவர்களின் உண்மையான நோக்கம் என்ன?.

"சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் சூழல் அதிக சிக்கலான மாறிவிட்ட நிலையில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மையப்படுத்தப்பட்ட தலைமை பொருத்தமானதாகவும் தேவையானது இல்லை எனவே அகிலம் கலைப்பு சம்பந்தமான செயற்குழு தீர்மானம் யதார்த்தத்துடன் பொருந்தியதாக இருக்கிறது என்பதையும் சரியானது என்பதையும் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன என்ற அகிலம் கலைப்பு "பற்றிய மாபெரும் விவாதத்தின் கருத்துக்களை ஆமோதிபதுதானே சரியான மார்க்சியவாதிக்கான புரிதல்

கம்யூனிஸ்ட் அகிலம் கலைப்பு என்ற சரியான முடிவும் பொருத்தமான நேரத்தில் கலைக்கப்பட்டது என்பதும் பாசிச எதிர்ப்பு முன்னணி பலப்படுத்தும் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது என்பதிலிருந்து அறியலாம் .

முதல் உலகப் போரில் போர் தொடங்கினால் அதை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற சர்வதேச செயல்தந்திரம் இரண்டாம் உலகப் போரில் பாசிஸ எதிர்ப்பு முன்னணி செயல்தந்திரம் உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்தால் வெற்றிகரமாக செயல்படுத்த பட்டவை.

அகிலம் கலைக்கப்பட்டதால் உலகப் புரட்சி தடைப்படும் என ஆளும் கும்பல் மகிழ்ந்தது. ஆனால் அவர்கள் நினைத்தற்க்கு மாறாக அகிலம் கலைப்புக்கு பிறகு பாசிசம் வீழ்த்தப்பட்டது, சீனம், வியாட்நாம், கொரியா, கியூபா போன்ற நாடுகள் விடுதலை அடைந்தது .

அகிலம் கலைக்கப் பட்டதால் கம்யூனிஸ்டுகள் சர்வதேச ஒற்றுமை கைவிட்டனர், சர்வதேசத்தை கைவிட்டனர் என்று அர்த்தமல்ல புதிய சூழ்நிலையில் புதிய வடிவங்களை கம்யூனிஸ்டு இயக்கங்கள் முன்வைத்தது அவைதான் வரலாற்று நிகழ்வு.

1953 ஸ்டாலின் இறப்புக்குப்பின் குருசேவ் தலைமையிலான சோவியத்தில் உலக கம்யூனிச கட்சிகளின் 1956ல் காங்கிரஸ் நடைபெற்றது மற்றும்  1957 இல் மாஸ்கோவில் சோஷலிச நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு நடைபெற்றது இதில் மாவோ தலைமையில்  சீன கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொண்டது.

1960 களில் 81 கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொண்ட சர்வதேச மாநாடு நடைபெற்றது . இதில் மாநாடு அறிக்கையும் உலக அனைத்து மக்களுக்கும் என்று இரு அறிக்கை கூட்டாக தயார் செய்யப்பட்டு வெளியிட்டது.

திரும்பவும் 1969இல் மற்றொரு சர்வதேச மாநாடு மாஸ்கோவில் நடந்தது.  

அகிலம் கலைக்கப்பட்ட. பல   ஆண்டுகளுக்குப் பிறகும்  மாஸ்கோவில் சில மாநாடுகள் நடைபெற்றது அதில் அகிலம் கலைக்கப்பட்டது பற்றிய பிரச்சினைகள் எழவேயில்லை. அந்த குருசேவ் வாரிசுகளே வைக்காத குற்றச்சாட்டுகளை ட்ராட்ஸ்கியவாதிகள் தூக்கி அலைவதன் மர்மம் என்ன ?

பாசிச எதிர்ப்பு முன்னணி தந்திரம் தவறானது என்ற இவர்களின் வாதம் அன்றே பொய்த்து போய்விட்டது.

அதாவது பாசிச எதிர்ப்பு முன்னணி செயல்தந்திரம் மூன்று இலக்குகளை கொண்டிருந்தது முதலில் உலகின் முதல் சோசலிச சோவியத் பாதுகாப்பது இரண்டாவது ஹிட்லரை தோற்கடிப்பது மூன்றாவது விடுதலைக்காக போராடிய மக்களுக்கு நம்பிக்கை ஒளி ஓட்டுவது இந்த மூன்றும் சாதிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. இந்த மூன்றும் நடைமுறைப் படுத்தப்பட்ட பிறகு இவர்களுக்கு என்ன பிரச்சனை?

இந்திய கம்யூனிஸ்ட் இயக்க பிளவும் பின்னடைவுக்கும் காரணம் தேடாமல் சோவியத்தையும் சீனாவையும் தேடிக்கொண்டு கொண்டுள்ள இவர்கள் . இந்திய புரட்சிக்கான தேர் குடைசாய்ந்து உள்ளது அதை சரி செய்து சரியான புதிய முறையில் புரட்சிக்கான வழியில் எப்படி பயணிப்பது என்பது தான் கம்யூனிஸ்டுகள் முதல் பணி இந்த புரிதல் தேடாமல் அதற்கான ஆய்வு இல்லாமல் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் தலைவர் சர்வதேச கம்யூனிச இயக்கங்கள் மீது விமர்சனம் வைப்பதும் பழி போடுவதும் கம்யூனிஸ்ட்களின் வேலையா ?.

தொடரும்....

ஆதாரம் :- அகிலங்களின் வரலாறு NCBH

                அகிலங்களின் வரலாறு NCBH


    


இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...