தேசிய இனப்பிரச்சனையும் முதலாளித்துவ தேசியவாதமும்

 தேசிய இனப்பிரச்சனையும் முதலாளித்துவ தேசியவாதமும்

தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையும் முதலாளித்துவ தேசிய வாதமும்
திருச்சி மாவட்ட முற்போக்கு இளைஞர் அணி என்ற பெயரால் "இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வு தமிழீழ நாடு பெறுவதுதமிழீழ நாடு பெறுவது ஆயுதப் போராட்டத்தின் மூலமே!" என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளதுஅதில் தேசிய இனப் பிரச்சனைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் வைக்கப்படுள்ளனகுறிப்பாக ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப்பிரச்சனை புரட்சிக்கு புதிய எல்லைகளை வகுத்து தருவதாகவும்எனவே ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அரசாக பிரிவதும்தொழிலாளர் வர்க்க கட்சிஇன அடிப்படையில் தனித்தனியாக கட்டப்படுவதும்இச்சகாப்பத்தத்தில் செய்யப்பட வேண்டியவை என்றும் அது கூறுகிறதுஇக்கருத்துக்கள் மார்க்சிய - லெனினியத்திற்கும் முற்றிலும் புறம்பானவைபாட்டாளி வர்க்க நலனுக்கு விரோதமானவை இது எவ்வாறு என்று பரிசீலிக்கும் முன்பாக தேசிய இனப் பிரச்சனை பற்றியும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது பற்றியும் பொதுவான மார்க்சிய - லெனினிய கண்ணோட்டம் என்ன என்பதைப் பார்ப்போம்முதலில் தேசம்தேசிய இனப் பிரச்சனை என்றால் என்னசுயநிர்ணய உரிமை கோரிக்கை ஏன் எழுகிறதுஅதன் பொருளென்ன என்பவற்றைப் பார்ப்பது அவசியம் அடுத்து தேசிய இனப்பிரச்சனையில் லெனினிய அணுகுமுறை என்ன என்பதையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் இப்பிரச்சனை என்ன வடிவம் எடுக்கிறதுஅது எவ்வாறு தீர்க்கப்படுகிறதுஇப்பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் என்ன நிலை மேற்கொள்ளவேண்டும்பாட்டாளி வர்க்க கட்சி எவ்வாறு கட்டப்பட்ட வேண்டும் என்பனவற்றையும் மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனை வெளிச்சத்தில் பார்ப்போம்இறுதியாக திருச்சி முற்போக்கு இளைஞர் அணி பெயரால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் காணப்படும் தவறான கருத்துக்களை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

தேசம்தேசிய இனப்பிரச்சனை என்றால் என்னதேசம்தேசிய இனம் என்றால் என்ன?
ஸ்டாலின் வரையறைப்படி, "ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழிபொதுவான வாழும் பகுதிபொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்". இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் - அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றினஅவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தனஅவற்றின் முடிவில் அதாவது முழு பொது உடமை சமுதாயத்தில் தேசங்களும் மனிதர்களுக்கிடையே தேசிய இன வேறுபாடுகளும் மறைந்துவிடும் என்பது இதிலிருந்து பெறப்படுகிறதுமுதலாளித்துவத்திற்கு முன்பு தேசங்கள் இல்லையா என்றால் பண்டைய பழங்குடி சமூகங்களீன் அழிவில் தேசிய இனங்களுக்கான சில கூறுகள்தாம் தோன்றி நாளாவட்டத்தில் வளர்ந்து வந்தனநிலப்பிரபுத்துவத்தின் இறுதியில் அதாவது முதாலாளித்துவம் வளர்ச்சியடையும் கட்டத்தில்தான் மக்கள் தேசங்களாக உருவாகின்றனர்தேசிய இயக்கங்கள் தோன்றுகின்றனதேசிய இயக்கங்கள் முதலாளித்துவத்துடனும் சரக்கு உற்பத்தியுடனும் தொடர்புடையது என்றும் தேசம் என்பது இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தைச் சேர்ந்த வகையினம் என்றும் ஏன் கூறுகிறோம்சரக்கு உற்பத்தியும் சரக்கு பரிவர்த்தனையும் துரிதமாக நடந்தேறுவதற்கு மக்களுக்கிடையே நெருங்கிய தொடர்புகளும்ஸ்தல சந்தைகள் ஒன்றோடொன்றுடன் பிணைக்கப்படுதலும் அவசியம்மனித உறவுகளுக்கு மிக முக்கிய சாதனம் மொழியாதலால் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களிடையே பரிவர்த்தனை உறவுகள் மிக விரைவில் வளர வாய்ப்புள்ளதுஎனவே சரக்கு உற்பத்தி வளரத் தொடங்கியதும் அது ஒரு மொழிப் பகுதியில் பற்றி படர்கிறதுஒரு குறிப்பிட்ட மொழிப் பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாக வழியிருந்தால் சரக்கு உற்பத்தியின் பெருக்கத்திற்கும் அப்பெருக்கத்தை அடிப்படையாக கொண்ட வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் அபிவிருத்திற்கும் மிகவும் உகந்ததுஎனவே முதலாளித்துவம் தனது சந்தை நலன்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கைப்பற்ற விரும்புவதுடன் அப்பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாகவுமிருக்க விரும்புகிறதுஅம்மொழியின் ஐக்கியத்தையும் அதன் தங்குதடையற்ற வளர்ச்சியையும் விரும்புகிறதுஆகவேதான் எல்லா இடங்களிலும் தேசிய இயக்கங்களும் தேசிய அரசு அமைத்தலுக்கான முயற்சிகளும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளனதேசிய இயக்கங்களின் பொருளியல் அடிப்படையைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்."உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளதுசரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும்அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும்இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறதுமனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழிநவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமானவிரிவான வாணிகத்துக்கும்மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும்இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறியபெரிய உடமையாளனுக்கும்விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள்மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும்தான்."(லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை)

இனி தேசிய இன பிரச்சனை என்றால் என்னஅது ஏன் எழுகிறது என பார்ப்போம்ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வுமொழிகலாச்சாரம் இவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லையெனில் அங்கு தேசிய இன பிரச்சனை எழுகிறதுஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அங்கு ஜனநாயகத்தை அனுமதிக்கவில்லையெனில்ஜனநாயகமற்ற அரசமைப்பைக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்போது அந்நாட்டில் தேசிய இன ரீதியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளும் இருக்குமேயானால் அப்பொழுது அங்கு நிலவுகின்ற ஜனநாயகமற்ற ஆட்சிமுறையானது அத்தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறதுஅதன் மூலம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே விலங்கிடுகிறதுஅப்போது தேசிய இன ஒடுக்குமுறையும் அதனை எதிர்த்து தேசிய இக்கங்களும் தோன்றுகின்றனஇம்முரண்பாட்டையே தேசிய இன பிரச்சனை என்கிறோம்எனவே இம்முரண்பாட்டிற்கு அடிப்படையாக தீர்க்கமான பொருளாதார காரணிகள் இருப்பதைப் பார்க்கமுடியும்வளரும் உற்பத்தி சக்திகளுக்கு உகந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றனவா இல்லையாஅந்நாட்டின் அரசமைப்பு முறை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையுறாக இருக்கின்றதா இல்லையா என்ற விஷயங்கள் இப்பிரச்சனை தோன்றுவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன.

தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளதுமுதலில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் உதித்த காலகட்டம்இக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவ உறவுகள் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் நிலப்பிரபுத்துவ அரசமைப்பு முறைகள் ஒருங்கிணைந்த தேசிய சந்தைகள் உருவாவதை தடுக்கின்றனதேசிய இன ஐக்கியத்தை தடுக்கின்றனஆகவே வெற்றியடைந்த முதலாளித்துவ வர்க்கங்கள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ அமைப்புகளை தகர்த்துவிட்டு ஜனநாயக அரசுகளை நிறுவினஇந்நிகழ்ச்சிப்போக்கில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்தனஇவ்வாறு இப்பிரச்சனை பழையவகைப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பகுதியாக தீர்க்கப்பட்டனஒரே அரசின் எல்லைக்குள் பல தேசிய இனங்கள் வாழும்போதுகூட அங்கு ஜனநாயக அரசு நிலவினால் தேசிய இனங்கள் அமைதியாக சேர்ந்து வாழ முடியும் அல்லது அமைதியாக பிரிய முடியும் என முதலாளித்துவம் நிரூபித்தது. (உம்சுவிட்சர்லாந்துநார்வேஅடுத்து தாமதமாக முதலாளித்துவம் வளரத் தொடங்கிய கிழக்கு ஐரோப்பாவில் அதாவது முதலாளித்துவ ஜனநாயகபுரட்சிகள் நிறைவு பெறாதிருந்த நாடுகளில் பல தேசிய அரசுகள் நிலவிய இடங்களிலெல்லாம் அந்த ஜனநாயகமற்ற அரசமைப்புமுறைகளுக்கும் முதலாளித்துவம் வளர்ந்துவந்த தேசிய இன பரப்புகளுக்குமிடையே முரண்பாடு கூர்மையடைந்தது (.ம்ஜாரிச ரஷ்யாவில் போலந்துஉக்ரேன்இம்முரண்பாடுகள் தேசிய இனப் பிரச்சனையாக உருவெடுத்தனஅதே சமயம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்துவிட்டபடியால் முதலாளித்துவம் புரட்சிகர குணத்தை இழந்து பிற்போக்காக மாறிவிட்டபடியால்உலக முதலாளித்துவ புரட்சிக் கட்டம் முடிவுக்கு வந்து உலக பாட்டாளி வர்க்க புரட்சிக்கட்டம் தொடங்கிவிட்டதுஎனவே பழைய வகை முதலாளித்துவ புரட்சி கட்டத்தின் போது தீர்க்கப்படாதிருந்த புரட்சிக்கடமைகளை பாட்டாளிவர்க்கம் எடுத்து நிறைவேற்றுகிறதுஆகவே தேசிய இனப்பிரச்சனைகளும் உலக பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக மாறுகின்றனஅக்டோபர் புரட்சியினால் தீர்த்துவைக்கப்பட்டனபாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் பிரிந்து செல்லும் ஜனநாயக உரிமை உத்திராவாதம் செய்யபடுகின்ற ஜனநாயக அமைப்பில் பல தேசிய இனங்கள் சமத்துவமாக வாழ முடியும்இன ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என பாட்டாளி வர்க்கம் நிரூபித்ததுமுன்பு முதலாளித்துவத்தின் கீழ் விதிவிலக்காகயிருந்த இன சமத்துவ அரசுகள் தற்போது பொது விதியாக மாறுகின்றன.

அடுத்து ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இன பிரச்சனை வேறொரு வடிவத்திலும் எழுந்ததுமுதலில் வளர்ந்த ஏகாதிபத்திய அரசுகள் பின் தங்கியிருந்த ஏராளமான நாடுகளை தமதுகாலனிஅரைக்காலனி நாடுகளாக மாற்றினஇதன் மூலம் அக்காலனிஅரைக்காலனி நாடுகளின் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சியையும்பொருளாதாரசமூக வளர்ச்சியையும் தடுத்தனஉலக முழுவதும் ஒடுக்கும் நாடுகளாகவும்ஒடுக்கப்படும் நாடுகளாகவும் பிரிந்தனஇவ்வாறு தேசிய இன பிரச்சனையானது காலனிஅரைக்காலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையேயான முரண்பாடாக வடிவெடுத்ததுஇதனை எதிர்த்து காலனிஅரைகாலனி நாடுகளில் தேசவிடுதலை இயக்கங்கள் தோன்றினஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க சகாப்தமாக இருப்பதால் அந்த தேச விடுதலை இயக்கங்களுக்கு அந்தந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கங்கள் தலைமை தாங்க முடியவில்லைஆகவே இவ்வியக்கங்கள் உலக பாட்டாளி வர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக அந்தந்த நாடுகளில் நடைபெறும் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகமாறினஇப்புரட்சி முற்றுப் பெற்ற இடங்களில் இத்தேசியயின பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காணப்பட்டன. (-ம்மக்கள் சீனம்இந்த மூன்றாவது காலகட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லைஉலக ஏகாதிபத்திய அமைப்பு முடிவுக்கு வரும்போதுதான் இக்கட்டம் முடிவுக்கு வரும்.

இம்மூன்று கட்டங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் காணப்படுகிறதுஜனநாயகமற்ற ஆட்சிமுறை நிலவுவதால்தான் தேசிய இனப்பிரச்சனை எழுகிறதுஆகவே அரசை ஜனநாயக ரீதியில் சீரமைப்பைதில் அதாவது ஜனநாயகப் புரட்சியின் வெற்றியில்தான் இப்பிரச்சனையின் தீர்வு அடங்கியுள்ளதுதேசிய இனப் பிரச்சனையை புரட்சியின் வெற்றிப் பிரச்சனையிலிருந்து தனித்துப்பார்க்காமல் அப்பிரச்சனையிலிருந்து பிரிக்க முடியாத தொடர்புடையதாக புரட்சியின் பொதுவான பிரச்சனையின் பகுதியாக பார்க்க வேண்டும். (ஸ்டாலின் - மீண்டும் தேசிய இன பிரச்சனை குறித்துஅத்துடன் ஜனநாயகத்தை பூர்த்தி செய்ய விரும்புகிற பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் தேசிய இன ஒடுக்குமுறையை அது எந்த வடிவத்தைலிருந்தாலும் விட்டுக் கொடுக்காது எதிர்க்க வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறதுதேசிய இன ஒடுக்குமுறைஒடுக்கப்பட்ட இனத்து முதலாளித்து வர்க்கத்தை மட்டுமல்ல அனைத்து மக்களது மொழியுரிமைஎழுத்துரிமைமற்ற ஜனநாயக உரிமைகளையும் கட்டுப்படுத்துகிறதுஅனைத்து வர்க்கங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறதுஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுவான சமூக வளர்ச்சியே பாதிக்கப்படுகிறதுஇவை மட்டுமின்றி பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசை திருப்பி வர்க்க ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கிறதுஎனவே பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்இன சமத்துவத்தை உயர்த்தி பிடிக்கவேண்டும்.
-( நன்றி சமரன் )

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...