பாரதியார் பற்றி தேடுதல்

 பாரதியைத் திரித்து கூறவும்திரையிட்டு மூடவும்அவன் மீது புழுதியை வாரித் தூற்றவும் பல முயற்ச்சிகள் நடந்தே வந்துள்ளனபாரதி பார்ப்பனக் குலத்தில் பிறந்தான் என்பதாலும், ‘ஆரிய் நாடெங்கள் நாடே’ என்றெல்லாம் பாரத பூமியை அவன் பாடியிருந்த காரணத்தாலும்அவனைப் பார்ப்பனீயக் கவி என்று சித்திரிக்கவும் பழிதூற்றவும் திராவிட இயக்கத்தினர் தொடர்கின்றனர்.

ராஜாஜி போன்றவர்களோ பாரதியை ஒரு சமுதாயக் கவி என்ற உண்மையை மறைத்தும் மறுத்தும் அவனை வேதாந்தக் கவியாகச் சித்திரிக்கவும் முயன்றார்கள்.
பாரதியின் சமுதாய லட்சியங்களையும் கனவுகளையும் ஜீரணிக்க முடியாதவர்கள் முகம் சுழித்தார்கள்குயில்பாட்டுகண்ணன் பாட்டுபாஞ்சாலி சபதம் போன்ற பாடல்களைப் பாடியதால் பாரதி நிலைத்திருக்கிறானே தவிர, ‘நிலையற்ற ’தேசிய் கீதங்களைப் பாடியதால் அல்ல என்று விமர்சனம் வைத்தனர்.
இப்படி பல எதிர்புகளுக்கிடையே பாரதியை அன்றைய ஆங்கில அரசு எழுத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை தடை செய்திருந்த போதும் தடைகளை மீறி பாரதியின் எழுதுத்துக்கள் இன்று ஆச்சரியமான ஒன்றல்லவோ?
பாரதி வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள் அதில் அவன் 1905 லிருந்து 1921 ஆம் ஆண்டு வரை பதினாறு ஆண்டுகள் அவன் எழுதி சென்றவைதான்இன்றும் அவன் சிலரின் அரசியல் பணிக்கு நெருடலாக உள்ளான்.
இதனை விளக்கி கொள்ள சோவியத் நாட்டு புரட்சிக் கவிஞனான மயாகோவ்ஸ்கி ஒருமுறை தனது கவிதை பற்றிய விமர்சனம் செய்த ஒருவர்உங்கள் கவி பொருள் நிகழ்காலத்தின் தற்காலிக பிரச்சினை பற்றியது இவை பேரிலக்கியங்களைப் போல ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் கவிதை நிலைத்து நிற்குமாஎன்று கேள்வி எழுப்பினான்அதற்கு மயாகோவஸ்கி, " முடிந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்து இந்த கேள்வியை கேள்அப்பொழுது பதிலளிக்க நான் இருப்பேன்ஆனால் கேள்வி கேட்க நீதான் இருக்க மாட்டாய்!" என்றான்..பாரதியின் வாழ்க்கை போராட்டத்தில் ஆம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் இருந்தது அவனின் வாழ்க்கை விமர்சனம் செய்பவர்கள் அறிந்து கொள்ள மார்க்சிய அடிப்படையில் அணுகவும்,
ஒவ்வொரு கலை வடிவமும் சமூகத்தின் ஏதோவொரு பிரிவோடு உறவு கொண்டுள்ளதுஇது அதன் உள்ளடக்கத்தாலே நிர்ணயிக்கப்படும்இந்த உள்ளடக்கம் கலைஞன் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கத்தின் கருத்துகளாகவோ அல்லது அவன் மீது செல்வாக்குக் கொண்டுள்ள பல்வேறு சமூகப் பிரிவுகளின் கருத்துகளாகவோ அமையும்எனவே ஒரு படைப்பாளியையோ அவன் படைப்புகளையோ விமர்சிக்கும் போதுஅவன் படைப்பின் உள்ளடக்கம்அதன் சாராம்சம்சமூகப் பிரிவுகளுடன் கலைஞனின் தொடர்புசமூக வாழ்வின் மீது படைப்பு வகிக்கும் செல்வாக்குஅதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை அப்படைப்புகள் எழுந்த காலத்தை ஒட்டி ஆராய வேண்டும்ஏனெனில் கலைஞனின் படைப்புகள்அவன் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு.எனவே ஒரு படைப்பை ஆயும்போதுஅது தோன்றிய காலம் பற்றியும்அக்காலத்தில் முரண்படும் சமுதாய சக்திகள் பற்றியும்அதன் பல்வேறு விதமான உட்பிரிவுகள் பற்றியும்அவற்றுக்குள்ளே படைப்பாளி எதன் சார்பாக நின்று படைக்கிறான் என்பது பற்றியும் பார்க்க வேண்டும்.(தொடரு

தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரை யெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?

பாஞ்சாலி சபதம்[தொகு]

இதழியல் பணியும் விடுதலைப் போராட்டமும்[தொகு]

பாரதியார்முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார்சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியாபத்திரிகை புதுவையில் வெளியானது.

தடை செய்யப்பட்ட புத்தகங்கள்[தொகு]

பாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்ததுஇதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டனஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின.[8]

புதுக்கவிதைப் புலவன்[தொகு]

பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன்இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல்பொருள்கொள்யாப்புஅணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர்இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதிபுதுக் கவிதை எனப் புகழப்படும்பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர்.

பெண்ணுரிமைப் போராளி[தொகு]

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். "போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்என்ற பாரதி பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றார்பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதிசாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார்.

 

பாரதிதமிழ்ஆங்கிலம்இந்திசமற்கிருதம்வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர்பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.

சுப்ரமணிய பாரதியார்

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர்இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர்பத்திரிக்கையாசிரியர்சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர்தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார்விடுதலைப் போராட்ட காலத்தில்இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்புடிசம்பர் 11, 1882
பிறப்பிடம்எட்டயபுரம்தமிழ்நாடு (இந்தியா)
பணிகவிஞர்எழுத்தாளர்விடுதலை வீரர்
இறப்புசெப்டம்பர் 11, 1921
நாட்டுரிமைஇந்தியா
பிறப்பு
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும்இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன்அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார்இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும்புலமையும் இருந்ததுஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார்தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார்இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர்இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார்அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.    .
பாரதியாரின் திருமண வாழ்க்கை
பாரதியார் அவர்கள்பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார்சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார்பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார்இவர் சமஸ்கிருதம்வங்காளம்இந்திஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
சுதந்திரப் போரில்பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய்காட்டுத்தீயாய்சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்ததுபாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார்பாரதியின் எழுச்சிக்குதமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்ததுஅதுமட்டுமல்லாமல்விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால்பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார்இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராகநவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர்மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோதுஎதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார்பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதிதனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
எட்டயபுரத்திலும்சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறதுஇவர் பிறந்த எட்டயபுரத்தில்பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளதுபாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும்இவருடைய திருவுருவச் சிலையும்இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர்உலகதமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...