பெரியார் எழுதிய “தத்துவ விளக்கம்”

  பெரியார் எழுதிய “தத்துவ விளக்கம்” என்ற நூலின் அடிப்படையில் அவரின் தத்துவம் விமர்சிக்கப்பட்டுள்ளது. “விடுதலை” (1952-1959)ல் வெளிவந்த கருத்தின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயான பெரியாரின் கருத்து விமர்சிக்கப்படுகிறது. இந்நூலில் கொடுக்கப்பட்ட பெரியாரின் மேற்கோளே அவரின் கருத்துமுழுவதையும் வெளிப்படுத்திவிடுகிறது.

“நல்ல தொழிலாளர் சங்கம் என்று ஒன்று இருக்க வேண்டும் என்றால் அது முதலாளயிடத்தில் விசுவாசம், சொந்தப் பொறுப்பு போலக் கருதி தொழில் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது முதலியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.” இந்தக் கருத்தை இந்நூல் பெரியாரின் தொழிற்சங்க இயக்கப் பிரகடனம் என்று கூறுகிறது.
கடவுளும், மதமும் மனிதர்களால் படைக்கப்பட்டுப் பரப்பட்டதாகக் கருதுகிற பெரியாரின் கருத்து, மார்க்சின் மதம் பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தால் மறுக்கப்படுகிறது.
பார்ப்பனர், மற்றும் மதங்களின் ஒழிப்பில் தான் சாதி ஒழிப்பு இருப்பதாகப் பெரியார் கருதுகிறார். இதற்கு மாறாக “சாதியை ஒழிக்க வேண்டுமானால் சாதி முறையினால் ஆதிக்கம் பெறுகின்றவர்களும் அதற்கான உற்பத்தி மறையும் ஒழிக்கப்பட வேண்டும்” என்ற இந்நூல் மார்க்சிய வழியில் தீர்வைக் கூறுகிறது. சாதிய ஒழிப்பில் பெரியாரின் வர்க்க சமரத்தை இந்நூல் மிகத் தெளிவாக அம்பலப்படத்தியுள்ளது.
“சாதிக்கு எதிரான போராட்டம் என்பது உண்மையில் நிலப்பிரபுக்களின் நிலவுடைமைக்கும், அவர்களுடைய சாதிய ஒடுக்கு முறைக்கும் எதிரான போராட்டம் என்பதை மறைத்து பார்ப்பானுக்கு எதிரான போராட்டம், கடவுள், மதத்துக்கு எதிரான போராட்டம் என்பதாகச் சுருக்கிவிடுகிறார். இதனால் பெரியாரின் சாதி ஒழிப்புக் குரல் பார்ப்பானுக்கு எதிராகச் சம அந்தஸ்து கோரி மேல்சாதி பணக்காரர்கள் எழுப்பும் குரலாக இருக்கிறதே தவிர முழுமையான சாதி ஒழிப்புக்கான குரலாக இல்லை.
https://kedayam.files.wordpress.com/2014/01/binder12.pdf பெரியார் யார் என்பதும் அவரது தத்துவம் என்ன என்பதும் விளக்கி உள்ளார் எழுத்தார் கொஞ்சம் வாசித்து தெரிந்துக் கொள்ள.
விடுதலை இதழ் 20-09-1952 ல் வெளியான பெரியாரின் கருத்து"நல்ல தொழிலாளர் சங்கம் என்று ஒன்று இருக்க வேண்டும் என்றால் அது முதலாளயிடத்தில் விசுவாசம், சொந்தப் பொறுப்பு போலக் கருதி தொழில் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது முதலியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.” வேறு வேண்டுமெனில் பெரியாரின் எழுத்துகள் என்னிடம் PDF வடிவில் உள்ளது சான்றழிக்க.
பெரியார் சொல்கிறார்,"தோழர்களே! கம்யூனிஸ்டுகளின் இன்றைய கிளர்ச்சி நடைபெற்று வந்தாலும், நடைபெறாவிட்டாறும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும். ஏன்! கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு,-அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்தச் சுவாலை இன்றில்லை யானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத்தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணுகுண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.”
(நமது இயக்கமும் கம்யூனிசமும்- பெரியாரின் நூலிலிருந்து)
தந்தைப் பெரியார்:-
“நாட்டு மக்கள் எல்லாம் ஒரு குடும்பம்போல, எல்லா மக்களும் பாடுபடவேண்டும்; வருகின்ற இலாபம் - விளைபொருள் முதலியவற்றை எல்லா மக்களுக்கும் பகிர்ந்தளிப்பது. இதுதான் பொதுவுடைமையாகும்.
இதன் அடிப்படைத் தத்துவம் என்ன? இப்படிப்பட்ட நிகழ்ச்சி ஏன் நடத்தப்படுகின்றது என்பனவற்றை யெல்லாம் புரிந்து கொண்டால்தான் பொதுவுடைமைத் தத்துவத்தின் சிறப்பு விளங்கும். மனிதன் அறிவைக் கொண்டு வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால், மனிதனென்றால் கவலை உள்ளவனாகவே இருக்கின்றான். பிரதமரானாலும், முதன்மந்திரியானாலும் அவர்களுக்கும் கவலைதான், “கோடீசுவரன்” ஆனாலும் அவனுக்கும் கவலைதான் நாட்டை ஆளுபவர்களுக்குப் பல பிரச்சினைகளைச் சமாளிக்கவேண்டிய கவலை நிலை உண்டாகிறது.
கோடீஸ்வரனுக்கு எப்படித் தனது ஒரு கோடி ரூபாயைக் காப்பது என்பது கவலை; அத்தோடு நின்று விடுவதில்லை; தனக்கு ஒரு கோடி ரூபாய்தானே உள்ளது அடுத்தவனுக்கு 2 கோடி இருக்கின்றதே என்று தம்மிலும் மேம்பட்டவனைப் பற்றிக் கவலை யடைகின்றான்.
ஏழை தனக்குச் சாப்பாட்டிற்கு வழியில்லையே அவன் நல்வாழ்வு வாழ்கின்றானே என்ற வேதனையடைகின்றான். குச்சு வீட்டுக்கும் வழியில்லாத ஒருவன், வசதிபடைத்த ஒருவன் பங்களாவில் வாழ்வதைப் பார்த்து மனம் புழுங்குகிறான். இதுபோலக் கவலை, மனக் குறையென்பது எல்லாத் துறைகளிலும் இருக்கின்றது. (திருச்சி சிந்தனையாளர் சழகச் சார்பில், உறையூரில், 9-1-1972- இல் ஆற்றிய சொற்பொழிவு –உண்மை - பிப்ரவரி, மார்ச் 1972]
தொழிலாளர் ஆட்சி செய்யும் அரசாங்கம் நடக்கும் ரஷியாவைப் பாருங்கள். அங்கு யந்திரங்கள் தினத்திற்கு தினம் பெருகி, ஒவ்வொரு யந்திர சாலைகளிலும் பத்தாயிரம் இருபதாயிரம், முப்பதாயிரம் ஆணும் பெண்ணும் சரி சமமாக வேலை செய்கிறார்கள். அங்கு ஒருவருக்குக் கூட வேலை யில்லை என்று சொல்ல முடியாது. ஒருவராவது பட்டினி கிடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஒருவருக்காவது நாளைக்கு என்ன செய்வது என்ற கவலையே கிடையாது. ஓ தேசீயவாதிகளே! இதற்கென்ன பதில் சொல்லு கிறீர்கள்?
(குடிஅரசு - தலையங்கம் - 11.12 1932)
பெரியாரை பொருத்தவரையில் முதலாளி தொழிலாளி இருவரும் பங்காளி கூட்டாளி என்ற உறவில் சுமூகமாக இருக்க வேண்டும், கணவன் -மனைவி குடும்ப உறவை போல் இணக்கமான உறவு ஏற்பட செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
அதாவது "எந்தக் காரணம் கொண்டும் முதலாளிக்கும் - தொழிலாளிக்கும் இன்றைக்கு இருக்கிற மாதிரி ஏழாம் பொருத்தம் இருக்கக்கூடாது, இருவருக்குள்ளும் பரஸ்பரம் நல்லெண்ணமும் சுமுகமான உறவும் கூட்டுப்பொறுப்பு ஏற்படவேண்டும் இத்தன்மை ஏற்பட அடிப்படையில் மாறுதல் ஏற்பட வேண்டும் முதலாளியும் தொழிலாளியும் பங்காளிகள் கூட்டாளிகள் என்ற நினைப்பு ஏற்படவேண்டும்.( விடுதலை 20-09-1952).
மேலும் பெரியார் கூறுகிறார்," முதலாளி- தொழிலாளி இருவரும் ஒன்று சேர்ந்து உற்பத்தி செய்ய முடியும், உற்பத்தி நடக்க வேண்டும் என்றால் பணம் தொழில் இரண்டும் தேவை, உற்பத்தி மக்கள் நலனுக்கு உலக நலனுக்கு மிக மிக அவசியமாகும் என்றாலும் முதல் பணம் இருந்தால் தான் உற்பத்தி தலை காட்ட முடியும் . முதலாளி தொழிலாளி இருவரும் கணவன் மனைவி போன்றவர்கள் ஆவார்கள் கணவன் மனைவியும் குடும்பம் நடத்தி பிள்ளை பெறுவது போல் தான் முதலாளியும் தொழிலாளியும் சேர்ந்து தொழில் நடத்தி பண்டங்கள் உற்பத்தி செய்வதாகும் . கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும்( விடுதலை இதழ் 09-05-1961)

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...