பாராளுமன்றதை எப்படி கையாளுவது மார்க்சிய பார்வை.

 

நேற்றைய கிளப் அவுஸ் விவாதம்.

மார்க்சிய ஆசான்கள் பாராளுமன்றம் பற்றி என்ன சொல்லி உள்ளனர் என்பதனை பற்றியே.

தொடக்க உரையாற்றிய நான்,"

1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூனில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ அமைப்பை அப்படியே பயன்படுத்தி கொள்ள முடியாது என்றும், பாட்டாளி வர்க்கம் தனக்கான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் கொள்வதே முதலாளித்துவ அரசதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்றும் மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்"  என்றும், 

"பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாதுகுறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டுதான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப போராட்டம் நடத்த முடிகிறது.      போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும் - முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை - உபயோகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள் அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்."

 (லெனின் பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2).

மேலும் லெனின் இதனை பற்றி விரிவாக இடதுசாரி கம்யூனிசம் ஒரு இளம்பருவ கோளாறு என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதனையே சமூக ஜனநாயகவாதத்தின் இரண்டு போர் தந்திரங்கள் என்ற கட்டுரையில், பாராளுமன்றத்தில் பங்கேற்பது என்பது ஒட்டு மொத்த கட்சியின் வேலையல்ல அதற்க்கான குழுவின் வேலை மேலும் அவர்களை கண்காணிப்பது கட்சியின் பணி. மேலும் நாடாளுமன்றத்தில் பங்கு பெறுவதானது மக்களுக்கு நாடாளுமன்றம் யாரின் தேவைக்கானது இதிலிருந்து பாட்டாளி வர்க்க நலனுக்கு உகந்த முறையில் செயல்பட முடியாது என்பதை விளக்குவதும், சோசலிச புரட்சிக்கு அடிதளமிடுவதுமே நாடாளுமன்றத்தில் பங்கேற்பதற்க்கான நோக்கம் என்பார் லெனின். லெனின் தொகுப்பு நூல் 1 பக்கம் 98 க்கு மேல் வாசிக்க மேலும் சில புரிதலுக்கு.



அதன் பிறகு பேசிய தோழர் ஈஸ்வரன் மிகத் தெளிவாக இங்குள்ள போக்கை விவரித்தார், சட்ட விரோதமான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை  இணைப்பதை செயல்தந்திரமாகக் கொண்டுள்ளதாக கட்சி இருக்க வேண்டும்கட்சி இருக்க வேண்டும் இங்கு நமது நிலைபாடு எப்படி உள்ளது அவை மார்க்சியத்தை புரிந்துக் கொள்வதில் உள்ள குறைப்படே என்று விரிவாக பேசினார்.


தோழர் ரவீந்திரன் பாராளுமன்றம் பற்றிய இங்குள்ள கருத்துகளையும் மார்க்சிய பார்வையில் நாம் அணுக வேண்டியதையும் விளக்கினார்.

நமது புரிதலுக்கு

தேர்தலை எப்படி கையாளுவது.

முதற்க்கண் நமது மார்க்சிய ஆசான்கள் வார்த்தையில் தேர்தல் பற்றிய கருத்துகளை பார்ப்போம்.

1871 ஆம் ஆண்டில் பாரிஸ் கம்யூனில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ அமைப்பை அப்படியே பயன்படுத்தி கொள்ள முடியாது என்றும், பாட்டாளி வர்க்கம் தனக்கான பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவிக் கொள்வதே முதலாளித்துவ அரசதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்றும் மார்க்ஸ் முடிவுக்கு வந்தார்.

“அனைவருக்கும் வாக்குரிமை எனபது நமது எண்ணிக்கையை ஒருமுறை கணக்கு பார்க்க அனுமதிக்கிறது என்பதைவிட வேறெந்த பலனும் இல்லை. மக்கள் அனைவர் முன்பும், நமது தாக்குதலை எதிர்த்துத் தமது கருத்துகளையும், செயல்களையும் தாங்கி தற்காத்து முன்வரும்படி எல்லா கட்சியையும் கட்டாயப் படுத்தியது.நமது எதிரிகளுடனும் அதற்க்கு வெளியே மக்களிடைய்ற்யும் பேசுவத்ற்க்கு ஒரு மேடையைத்தந்தது. பத்திரிக்கை மூலமோ கூட்டங்கள் மூலமோ கருத்து வெளியிடுவதை விடவும் முற்றிலும் வெறுபட்ட அதிகார பலத்தோடும், சுதந்திரமாயும் பேசுவதற்க்கு வகை செய்தது”-எங்கெல்ஸ் (பிரான்சில் வர்க்க போராட்டங்கள் 1848-1850 நூலுக்கான முன்னுரையில்). முதலாளித்துவ நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என எங்கெல்ஸ் கூறுவதைக் கொண்டு புரட்சியைக் கைவிட வேண்டும் என ஒருபோதும் அர்த்தப் படுத்தி கொள்ளக் கூடாது. அவர், புரட்சிதான் தொழிலாளி வர்க்கத்தின், ஒரே உண்மையான வரலாற்று உரிமை என்று கூறினார்.

பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமான பலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டுதான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்ற முறையையும் எதிர்த்துப போராட்டம் நடத்த முடிகிறது. போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும் - முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை - உபயோகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள் அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்."

 (லெனின் பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2)

இந்திய பாராளுமன்றம் பற்றிய ஒரு கண்ணோட்டம்

 

இந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிறுத்தி, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை(?) தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்து வருகிறது. வெளித்தோற்றத்தில் பார்க்கும்பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்பு போல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் இறங்கினாலோ,  அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.

முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மேம்போக்காக  தொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவை ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் என்றும், தனிச் சொத்துடைமையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.

வறுமை, வேலை இல்லாத நிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறை உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அனுகுமுறை தான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறி புதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது. இதன் மூலம் முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பை தற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது. தன்னுடைய வீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.

இத்தகைய சூழலில், புரட்சிகர குழுக்கள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக குழப்பமடைந்துள்ளன. தற்போது நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக களம் இறங்கியுள்ளன. பாராளுமன்றப் பாதையில் பங்கெடுத்துக் கொள்வது குறித்து புரட்சிகர கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன.

சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முழுக்க முழுக்க பாராளுமன்றப் பாதையிலேயே மூழ்கி விட்டன. பாரளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்து குரல் கொடுப்பது மட்டுமே பிரதான மற்றும் ஒரே பணியாக கொண்டுள்ளது. மக்களை சமூக மாற்றத்திற்கான அணி திரட்டும் பாதையில் பயணிப்பதற்கான எந்தத் திட்டமும் இந்தக் கட்சிகளிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைவர்களே, அதாவது பொலிட்பீரோ உறுப்பினர்களே தேர்தல் களத்தில் நிற்கின்றனர் . பாராளுமன்ற உறுப்பினர்களின்      செயல்பாட்டை  கட்சி கட்டுப்படுத்த முடிவதில்லை.

கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்ற, சட்டமன்ற நலன்களே தீர்மானிக்கின்றன. கட்சியும் பாராளுமன்றப் பாதையும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதபடி பிண்ணிப் பிணைந்துள்ளது. கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் தன்னலங்கருதாத உழைப்பை மேல்மட்டத்தில் இருக்கும் கட்சிப் பொறுப்பாளர்களும், பாராளுமன்ற சட்டமன்றப் பிரதிநிதிகளும் தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் நிர்வாகிகள் பெரும்பாலும் முதலாளித்துவ சிந்தனையாளர்களாகவே உள்ளனர். சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் திரளை திரட்ட நினைப்பதும், பாராளுமன்றப் பாதை மூலமாகவே சோசலிசத்தை (உண்மையில் அவர்களுக்கு அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே!) நோக்கி பயணிப்பதுமாக இந்த கட்சிகளின் வழிமுறை உள்ளது.

சிபிஐ, சிபிஎம்மின் திருத்தல்வாதத்தை எதிர்த்து  உருவான எம் எல் இயக்கமானது பல பிரிவுகளாக பிளவுண்டு, இன்று ஆங்காங்கே பிரதேசம் சார்ந்த - பகுதி சார்ந்த குழுக்களாக உள்ளது. ஒருபுறம் மார்க்சிய அரசியலை மக்களிடையே கொண்டு சென்று அவர்களை அணிதிரட்டுவதில் பின்னடைவை சந்தித்து வரும் வேளையில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் புரட்சிகர குழுக்கள் பங்கேற்று, அங்கும் சட்டமன்ற- நாடாளுமன்ற அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த வேண்டும். சட்டமன்ற - நாடாளுமன்றங்களில் நடைபெறும் மக்கள் விரோத செயல்களை அனைத்து தளப் பிரதேசங்களுக்கும் (புரட்சிகர குழுக்கள் பலவீனமாக உள்ள மற்றும் தளப்பகுதிகள் நிறுவாத இடங்கள்) கொண்டுச் சென்று அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்கள் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரையில், முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் பங்கெடுத்து அதனை அம்பலப்படுத்த வேண்டும் என்பது புரட்சிகர குழுக்களின் கடமையாகும். நடைமுறையில் இருக்கும் பாராளுமன்ற - சட்டமன்ற முறையானது பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கு எந்தவித தீர்வையும் தர இயலாது என்பதை மக்களிடம் பரப்புரை செய்வது தற்போதைய கடமையாகும் அதற்க்கு ஓர் புரட்சிகர கட்சி உள்ளதா இங்கே என்பதுதான் கேள்வி.

  முடிவுரை:

சட்ட விரோதமான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை  இணைப்பதை செயல்தந்திரமாகக் கொண்டுள்ளதாக கூறிக் கொள்ளூம் மா-லெ அமைப்பு பாராளுமன்ற தேர்தலை புரட்சிகர அரசியல் பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தி கொள்ளவதும், புரட்சிகர நட்பு சக்திகளை நேச அணிகளை, ஆளும் வர்க்க மற்ற்டும் இதர வர்க்க அரசியல் கட்சிகளிடமிருந்து வென்றெடுக்கவும், பரந்த அரசியல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடவும், புரட்சிகர சக்திகளை தக்கவைக்கவும், வர்க்க போராட்டத்தை வளர்தெடுக்கவும் இந்த தேர்தல் பிரச்சாரம் பயனலிக்கும், மற்றும் பாராளுமந்த்திற்கு வெளியிலான போராட்டங்களில்லும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி புடம் போட்டு எடுக்கப் பட்ட தெளிவான அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றை குறிப்பான சூழல்களுக்குத் தக்கவாறு இயங்கியல் ரீதியாக இணைக்க கற்று கொள்ள வேண்டும்.

வாருங்கள் தோழர்களே விவாதிப்போம் மார்க்சியம் கற்றுதேறுவோம் பாட்டாளி வர்க்க அறிவை பெறுவோம் புகட்டுவோம், மார்க்சியத்தை எல்லோரும் புரியும் வகையில் கொண்டு செல்வோம். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------






அக்னிபத் எதிர்ப்பு போராட்டமும் இராணுவம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டமும்

 


நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் ,"அக்னிபத் எதிர்ப்பு போராட்டமும் இராணுவம் பற்றிய மார்க்சிய கண்ணோட்டமும்" என்ற தலைப்பில் பேசத் தொடங்கினோம். சில தோழர்களே கலந்துக் கொண்ட நிலையில் வளமை போல 7 மணிக்கு தொடங்கினோம். தோழர் முதலில் வைத்த கேள்வியே இங்கே இதனை பற்றி பேசுவோரின் நிலைப்பாடாக உள்ள போது அதனை முதலில் விவாதிப்போமே.

நாட்டில் ஆர் எஸ் எஸ் வளர்ச்சிக்கு இந்த படை பிரிவு பங்களிக்குமா? மீண்டும் இட்லர் பாணி பாசிசம் இங்கு நிறுவப் படுமா என்ற கேள்வியை தொடுத்த தோழருக்கு என்னுடைய பதிலாக ஒன்று மட்டும்தான் மக்கள் பிரச்சினையை பேசாமல் வெறும் மதவாதத்தில் மூழ்கி உள்ள பிஜேபியை போலாவே காவிகளை எதிர்பதன் பெயரில் அந்த இளைஞர்களின் போராட்டத்தின் ஆழத்தை புரிந்துக் கொள்ளாமல் அவர்கள் ஆர் எஸ் எஸ் க்கு சேவை செய்ய மட்டுமே பயிற்று விக்கப் படுவார்கள் என்பது அபத்தமே. அவர்களை வர்க்க ரீதியாக அணி திரட்ட வேண்டிய நாம் வாய் வார்த்தைகளால் முடங்கி போய் விட்டோம் அவர்கள் செயலில் இறங்கி மக்களை தற்காலிகமாக மடை மாற்றிக் கொண்டுள்ளனர் அவ்வளவுதான் இவை நிரந்தரம் அல்ல என்பேன்.

இனி கிளப் அவுஸ் விவாத பொருள்.

இந்த போராட்டம் ஏன்?

4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பும் இளைஞர்கள், ராணுவத்தில் தங்களுக்கு நிரந்தரப்பணி வேண்டும் என கோரி நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தற்போதுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு நடைமுறை காலப்போக்கில் அழிக்கப்பட்டு இதுபோன்ற முறை தொடர வாய்ப்பிருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. ராணுவத்தில் அதிக அனுபவமுள்ளவர்களே பணி ஓய்வுக்கு பிறகு செக்யூரிட்டியாக நியமிக்கப்படும் சூழல் உள்ள நிலையில், வெறும் 4 ஆண்டுகள் பணிபுரியும் ஒப்பந்த வீரர்கள் தங்களது பணி காலத்திற்கு பின் எந்த மாதிரியான பணிக்கு செல்வார்கள்? தொலைதூர கல்வி பயின்று கொள்வது பணி காலத்திற்கு பிறகான வேலைவாய்ப்புக்கு உதவும் என்றாலும் கூட, 17.5 வயதில் ராணுவத்தில் வேலை என்று ஆசை வார்த்தை காட்டினால், எப்படியாவது கஷ்டப்பட்டாவது மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஏழை இளைஞர்களின் கனவு சிதைந்து விடாதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

குடும்ப சூழல் கருதி ராணுவ வேலைக்கு செல்லும் நிலைக்கு இளைஞர்கள் பெரும்பாலும் கடைநிலையில் மற்றும் இடைநிலை சமூகத்தில் உள்ளவர்களே, இவர்கள் அனைவரும் ஜவான் நிலையிலுள்ள டிரைவர், செவிலியர், மெக்கானிக் போன்ற பணிகளில்தான் சேர்க்கப்படுவார்கள் என்றும் பொழுது வேலைவாய்பாக இதனை பார்க்கும் நிலையிலிருந்து சிந்தித்தால் புரியும் இவர்களின் தேவையை.

இந்தப் போராட்டம் எல்லாம் கடைநிலை ஊழியர்களான சிப்பாய்களுக்கே அதிகாரிகளுக்கல்ல அதை புரிந்துக் கொள்ளுங்கள். நாட்டின் பெரும்பாலான இளைஞர்கள் வேறு வேலை இன்மையால் இந்த வேலையை தேர்தெடுக்க வேண்டிய சூழலில் உள்ளனர் என்பதனை கணக்கில் கொள்ள வேண்டும். இதில் ஏழை எளிய மக்கள் எங்கே வருகின்றனர் என்றால்,"இராணூவத்துக்கு வேண்டிய படை வீரர்களை வழங்கி அவர்களுக்கு உணவளிப்பதற்க்கு மட்டுமே மக்கள் தேவைப்பட்டனர். இராணுவ வெறி அய்ரோப்பாவில் மேலாதிக்கம் செலுத்தி அதை விழுங்கி வருகின்றது," என்கின்றார் நமது ஆசான் ஏங்கெல்ஸ்.(Anti duhring page 286).

சரி

இராணுவம் என்றால் என்ன அதன் தேவை என்ன?

போர் நடத்துவதற்க்கு தேவையான மிக முக்கியமான கருவி இராணுவம் ஆகும்.

புரதான பொதுவுடைமைசமுதாயத்தின் அழிவுக்குப் பின் சமுதாயம் பகை வர்க்கங்களாகப் பிளவுபடுகின்றது. சமுதாயத்தின்வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகின்றது. சமுதாயம் நாடுகளாக அமையப் பெற்றவுடன்நாடுகளை ஒடுக்குவதும் அடிமைபடுத்துவதும் தொடங்கியது. பன்னெடுங்காலமாக வர்க்க சமுதாயத்தில்எண்ணற்ற போர்கள் நடந்துள்ள்ன. கடந்த ஐயாயிரம் ஆண்டுகளில் ஏற்த்தாழ 10,000 போர்கள் நட்ந்திருப்பதாக மதிக்கபடுகின்றது.

சமுதாயம் பகை வர்க்கங்களாகப்பிளவுபட்டவுடன் அரசு தோன்றுகிறது. இராணுவம் என்பது அரசின் சிறப்பான கருவியாகும் ஒருகுறிப்பிட்ட வர்க்கம் தனது அரசியல் மார்க்கத்தை ஆயுதமேந்தி வன்முறை மூலமாக பிரியோகிப்பதற்க்குபயன்படுத்தபடும் கருவியாகும்.

இராணுவத்தின் [தேவை] பணி

அரசின் வர்க்கத்தன்மை,இராணுவ சமுதாயத்தன்மையையும் அதன் செயல்பாடுகளையும் தீர்மானிக்கிறது. பொதுவாக கூறினால்இராணுவம் ஆளும்    வர்க்கத்தின் சார்பாக உள்நாட்டுபிறவர்க்கங்களின் போராட்டங்களை நசுக்கவும், ஆளும் வர்க்க கட்டளைக்கு அடிபணிந்து, வெளிநாட்டுவிவகாரங்களைப் பொருத்தவரை மற்றைய நாடுகளை ஆக்கிரமிக்ககூடியதாகவும், வெளியார் தாகுதலில்இருந்து தற்காத்துக் கொள்ளகூடியதாகவும் இருக்கும்.

இந்தியப் பாதுகாப்புப்படைகள்

இந்திய இராணுவம், இந்திய கடற்படைட, இந்திய விமான படை மற்றும் இந்திய கரையோரபாதுகாப்பு படை என நான்கு தொழில்முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன.  இந்திய ஜனாதிபதி இராணுவ தலைமை கமாண்டராக இருக்கிறார். இவை தகவலுக்கு போதும் என்று நினைக்கிறேன்.

இடதுசாரிகளுக்கு இடையில் என் பயணத்தில் நான் புரிந்து கொண்டவை

ஒவ்வொரு சமூகத்தில் தோன்றிய ஒவ்வொரு சமூக நிறுவனங்களும் சமூகத்தின் விளைப் பொருளே அச்சமுகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தேவையை ஒட்டி அவை ...